Posts

Showing posts with the label books

இந்துமதம் எங்கே போகிறது?

Image
  இந்துமதம் எங்கே போகிறது? அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர் நக்கீரன் பதிப்பகம் விலை 275 ரூபாய் 352 பக்கங்கள் புதுமைப்பித்தன் தன்னுடைய கடவுளின் பிரதிநிதி என்ற சிறுகதையில் இப்படி கூறுகிறார். "திரு சங்கர் சிற்றூரில் தமது தொண்டை பிரச்சாரம் செய்ய வந்தார். அவரும் ஜாதியில் பிராமணர். தியாகம், சிறை என்ற அக்கினியால் புனிதமாக்கப்பட்ட வர். சலியாது உழைப்பவர். உண்மையை ஒளிவு மறைவு இல்லாது போட்டு அடித்து உடைப்பவர்." இந்த வரிகள் சங்கருக்கு பொருந்துகிறதோ இல்லையோ ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்களுக்கு அப்படியே பொருந்துகிறது. இவர் சிறை செல்லாமல் சிந்தனையால் புனிதமாக இருக்கிறார். இந்தியாவில் இருந்த 450 மதங்களில் எது இந்து மதம்? என்ற கேள்வியில் முதல் கட்டுரையை தொடங்கி. ஜாதிகள் தொடக்கம், அதன் விரிவாக்கம். வேதம், மநு, உபநிஷத்துக்கள், உபநயனம் என பலவற்றை எடுத்துக்கூறி அதற்கு தக்க உதாரணமும் கொடுத்துள்ளார். மேலும் வேதம் மற்றும் மநுவுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள். சங்கரர் ராமானுஜர் வியாசர் ஜெய்மினி எனப் பலரின் கதைகள். பல மடங்களின் கதைகள், பல புனித தளங்களின் கதைகள். பல சடங்குகளின் காரணங்கள். இவை எல்லாவ...

வாய்க்கால்

Image
  வாய்க்கால் பூமணி டிஸ்கவரி புக் பேலஸ் விலை ரூபாய் 80 80 பக்கங்கள் கோபால், கோபாலின் அப்பா வள்ளிமுத்து வாத்தியார், கோபாலின் அம்மா நல்ல மணி, வெள்ளையம்மா மதினி, கோபாலின் காதலி லட்சுமி, லட்சுமியின் கணவன் வடிவேலு, கோபாலின் நண்பன் சுருளி முருகன் என பலர் கொண்டு இந்த கதை விரிவடைகிறது. கோபால் வெளியூரிலிருந்து பிறந்த ஊருக்கு பல வருடங்கள் கழித்து வருகிறான். ஊரில் அவன் சிறுவயதில் கழித்த இடங்களில் கடக்கும் பொழுது அவனது நினைவுகளில் விழும் கீறல்கள் பால்யகால காதலை மெல்ல மெல்ல அவன் சிந்தனையில் பனிதுளிகள் ஆக்குகிறது. அது நம்மையும் சில்லென குளிரச் செய்கிறது. ஊரில் லட்சுமி மட்டும்தான் மேல் வகுப்பு வரை படிக்க சென்றாள், அதுவும் தொடர கொடுத்து வைக்கவில்லை. லட்சுமி படிப்பை தொடர முடியாத பட்சத்தில் கோபால் லட்சுமி இடையே பழக்கவழக்கங்களில் இடைவெளி வருகிறது. மேற்படிப்புக்காக வெளியூர் செல்கிறான் கோபால் திரும்பி வரும்பொழுது அம்மாவின் கட்டாயத்தால் வேறு பெண்ணை மணம் முடிக்கிறான். நினைவுகளில் தவழ்வது சுகம் என்றாலும், அனேக நேரங்களில் எதார்த்தம் வேறு விதத்திலேயே அமைகிறது. லட்சுமிக்கு நடந்த சோகங்களை அதை கடக்க லட்சுமி எடு...

பிறகு

Image
  பிறகு பூமணி காலச்சுவடு பதிப்பகம் விலை 275 ரூபாய் 255 பக்கங்கள் கொரோனா காலம் என்று தனக்காக ஒரு வரலாற்றையே கட்டமைத்துக் கொண்டிருக்கிறது கண்ணுக்கு தெரியாத கிருமி. இன்னும் சில நாட்களில் மருத்துவரீதியாக கொரோனா பெற்ற ஜாதி. கொரோனா இல்லாத ஜாதி என்று மனித இனங்கள் பிரிக்கப்பட்டு விடுமோ என்று சந்தேகமாக உள்ளது. ஏதோ ஒரு தட்டு மக்களுக்கு மட்டும் இந்த நோய் என்பது போய் என்று எல்லாத் தட்டு மக்களுக்கும் பரவியிருக்கிறது. இந்த நோயின் தாக்கம் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை எந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை எண்ணிப்பார்க்க மனம் சற்றே கனக்கிறது. இந்த சூழலிலும் அதிகாரம், அறம் தவறி நிகழ்த்தும் தவறுகள் வருத்தத்திற்குரியது. மனம் அறம் பற்றி மனிதம் காக்க வேண்டிய தருணங்கள் இவை நண்பர்களே! மணலூத்து சக்கிலிய குடிக்கு மணலூத்தின் ஊர் பெரியவர்களால் துரைசாமிபுறத்திலிருந்து இடம் பெறுகிறான் கதையின் மையப் பாத்திரம் அழகிரி. அழகிரியின் தொழில் செருப்பு மற்றும் தோல் பொருட்கள் தைத்தல் குறிப்பாக விவசாயிகளுக்கு பயன்படும் நீர் இறைக்கும் கமலம் தைத்தல். இடம்பெயர்ந்த அழகிரியின் தோராயமாக இருபது ஆண்டுகால வாழ்க்கையை அவன் சந்திக...

காடோடி

Image
  காடோடி நக்கீரன் காடோடி பதிப்பகம் விலை: 300 ரூபாய் பக்கங்கள்: 312 மொழிபெயர்ப்பு சாராத தமிழ் நாவல்கள் பொதுவாக தமிழகம் சார்ந்து அல்லது இந்தியா சார்ந்து களமாகக் கொண்டு அதிகம் எழுதப்படுகிறது. இதில் விதிவிலக்காக அவ்வப்போது வேறு நாட்டை கதைக்களமாகக் கொண்டு கதைகளும் எழுதப்படுகிறது. அந்தவகையில் இந்திரா பார்த்தசாரதி எழுதிய ஏசுவின் தோழர்கள் போல காடோடியின் கதைக்களமும் அந்நிய மண். துவான் போர்னிய நாட்டின் காட்டுக்குள் மரம் அறுக்கும் நிறுவனத்தின் மேற்பார்வையாளர். உமர், பிலியவ், அன்னா, ஜோஸ், ரலா, குணா, குவான், பார்க், ஆங் போன்ற பாத்திரங்களை வைத்து கதை கையாளப்படுகிறது. ஆசிரியர் நம்மை கை பிடித்து காட்டுக்குள் அழைத்துச் சென்று அதன் அழகை, இசையை, தூய்மையை, பிரமிப்பை, தொடர்பை வாசிப்பின் மூலம் நமது ஐம்பொறிகளால் உணர வைக்கிறார். தும்பிக்கை குரங்குகளில் தொடங்கி பல விலங்குகள், இரு வாசிகள் பறவைகள், மீன்கள், மனிதர்களின் மூதாதையரான குரங்குகளுக்கு மூதாதையர்கள் எனப்படும் லீமர், துபையா போன்ற அணில் வகைகள், பூச்சியினங்கள், மர வகைகள், நீர்வழிப் பாதைகள் என அனைத்து குறிப்புகளும் சுவாரசியம். நட்பை நட்பாகவும் காதலை காதல...

தனது பொக்கிஷத்தை விற்ற துறவி

Image
தனது பொக்கிஷத்தை விற்ற துறவி (The monk who sold his Ferrari) ராபின் ஷர்மா விலை 199 பக்கங்கள் 308 சுயமுன்னேற்ற புத்தகங்கள் உண்மையிலேயே வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வருமா என்பது பற்றி அதிகம் யோசித்து கொண்டதில்லை. அது ஒருவேளை வாசிப்பவர்களின் நம்பிக்கையையும் மனநிலையையும் பொருத்தது. இந்தவகை புத்தகங்களில் நமக்கு தெளிவு கிடைக்கிறதோ இல்லையோ பலவகையான சுவாரசிய தகவல்கள் கொண்டிருக்கும். நடுத்தர வயது கடந்த ஜூலியன் என்ற வெற்றிகரமான வக்கீல் தொழில் புரிந்த ஒருவர். தான் இந்தியாவின் இமயமலை சிகரங்களில் கற்றதை ஏழு முக்கிய கருத்துக்களாக எடுத்துக்கூறும் நூல் இது. அங்கங்கே வரும் குட்டி கதைகள் புத்தகத்தை வேகமாக நகர்த்துகிறது. நம் பயத்தை நாமே நேர்கொண்டு சந்திக்க வேண்டும், அதை அடித்து வீழ்த்த வேண்டும் என்று கூறும் பக்கங்கள். காலையில் எழுதல், புத்தகம் வாசித்தல் போன்ற கருத்துக்களை கூறும் பகுதிகளும் நன்று. விதியை நாம் வடிவமைத்துக் கொள்ள முடியும் என்று திடமாக நம்பிக்கை ஏற்படுத்தும் ஆசிரியர் ஆன்மாவை ஒளிரச் செய்ய வேண்டும் என்றும் மெனக்கெடுவது ஏனென்று புரியவில்லை. கடந்த காலத்தில் வாழாதீர்கள், எதிர்காலத்தை நினைத்து அ...

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்

Image
  தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் பாரதி புத்தகாலயம் 239 பக்கங்கள் விலை: 150 ரூபாய் வாசிப்பவருக்கு வாசகன் என்று பெயர் எங்கிருந்து வந்தது என்று எனக்கு புலப்படவில்லை. பிற கலைகளில் அதை உள்வாங்குபவர்களுக்கு பொதுவாக ரசிகன் என்று ஒருமைப் படுத்துதல் சாத்தியம். ஒரு சிற்பியின் நுணுக்கத்தை அறிபவன் ரசிகன், ஒரு ஓவியனின் நுணுக்கத்தை அறிபவன் ரசிகன், இப்படி இன்னும் பல. வாசகன் என்பவனும் எழுத்துக்களை ரசிக்க இவனும் ஒரு ரசிகன் தான், ஆனால் வாசகன் என்ற தனித்த அடையாளம் தரப்பட்டிருக்கிறது. இது எழுத்தாளர்களில் குறுஞ்சதியாக கூட இருக்கலாம். வாசகனுக்கு ஒரு சவுகரியம் என்னவென்றால் எழுத்தாளன் தன் படைப்புகளால் தன் வாசகனை எழுத்தாளராகவும் ஆக்க உந்த செய்யும் சாத்தியக்கூறுகள் பிற கலைகளுடன் ஒப்பிடும்போது எழுத்துலகில் அதிக சாத்தியம் வாய்ந்த ஒன்று என்றும் மேலும் அதற்கான மெனக்கெடல் குறைவு என்று எனக்குப்படுகிறது. இந்தத் தொகுப்பில் மொத்தம் 32 கதைகள் உள்ளது. பூ என்ற தமிழ் படத்தின் மூல சிறுகதையான வெயிலோடு போய் என்ற சிறுகதையும் இதில் அடக்கம். கண்முன் கொட்டிக்கிடக்கும் ஆசைகளை, அன்பை, அலட்சியகளை, ஏமாற்றத்தை எளிமையான எழுத்துக்களின் மூ...

வெண்ணிறக் கோட்டை

Image
  வெண்ணிறக் கோட்டை ஆசிரியர்: நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஓரான் பாமுக் மொழிபெயர்ப்பாளர்: ஜி குப்புசாமி பக்கங்கள்: 176 விலை: Rs 200 விஞ்ஞானம் எழுத்து ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற ஒரு மேற்கத்திய சிந்தனையாளன் ஒரு கப்பல் பயணத்தில் துருக்கிய கப்பல் படையால் சிறை பிடிக்கப் படுகிறான். முதலில் அவன் சாதிக்பாட்சா என்ற சிறு நில மன்னனின் சிறையில் அடைக்கப்படுகிறான். இவனுக்கு மருத்துவம் தெரியும் என்பதால் சிறையில் சற்று பிரபலம் அடைகிறான். அதனால் பாட்ஷா விற்கு மருத்துவம் பார்க்கும் வாய்ப்பும் கிட்டுகிறது. இதனால் சிறையிலிருந்து வெளியில் வாழ, அவன் அவனைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட ஹோஜா என்பவனுக்கு அடிமையாக பரிசளிக்க படுகிறான். ஹோஜா விரும்பினால் இவனை விடுவிக்கலாம் அல்லது அடிமையாகவே வைத்திருக்கலாம். ஹோஜா ஒரு அறிவியல் கற்றுக்கொள்ளும் ஆர்வமுடையவன் என்றாலும் தனித்துவமானவன். பாட்ஷா இவனை பலமுறை இஸ்லாம் மதத்திற்கு மதம் மாற கூறியும் மறுத்துவிடுகிறான். ஹோஜாவும், இவனும் இணைந்து ஒரு மாபெரும் வானவேடிக்கை நிகழ்ச்சி நிகழ்த்துகிறார்கள். அதில் பாஷா துருக்கியின் சுல்தானை சிறப்பு விருந்தினராக அழைத்து இருக்கிறார். இதில் ஹோஜ...

விஞ்ஞான லோகாயத வாதம்

Image
  விஞ்ஞான லோகாயத வாதம் ராகுல் சாங்கிருத்தியாயன் தமிழில்: ஏ ஜி எத்திராஜீலு பக்கங்கள்: 153 விலை: 135 சென்ற வருடம் சென்னை புத்தக கண்காட்சி சாலையில் அதிகம் விற்ற 10 புத்தகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ராகுல் சாங்கிருத்தியாயன் அவர்களின் வால்கா முதல் கங்கை வரை புத்தகமும் இடம்பெற்றிருந்தது. வடமாநிலத்தை சேர்ந்த இவரின் தமிழகத்தில் அதிகம் வாசிக்கப்படுவது வரவேற்கத்தக்கதே. இந்தப் புத்தகம் எழுதிக் கிட்டத்தட்ட எண்பது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. உண்மையில் இந்தப் புத்தகத்தின் பல பக்கங்களை இரண்டு மூன்று முறை படித்து அர்த்தம் புரிந்து கொண்டேன். ஒரு புரியாத ஆங்கில படத்தை பார்ப்பது போன்று ஒரு அனுபவத்தை தந்தது இந்த புத்தகம். அதற்கு நமக்கு இதுவரை கற்பிக்கப்பட்ட மிக எளிமையான தத்துவங்கள் மட்டுமே காரணமாக இருக்கலாம். அது திருக்குறள் ஆக இருக்கலாம், எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்ற கீதை சாரமாக இருக்கலாம் அல்லது காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா என்ற கண்ணதாசனின் வரிகளாக இருக்கலாம். நம் சமூகத்தில் தத்துவ தர்க்கங்கள் அதிகம் இல்லாத சூழலை நாம் ஏன் ...

The Alchemist

Image
  The Alchemist Paulo coelho தமிழில் ரசவாதி என்ற பெயரில் நாகலட்சுமி சண்முகம் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். ஒரு சிறுவன் கனவில் வரும் புதையலைத் தேடி ஸ்பெயின் நாட்டின் அந்தாலூசியா (Andalusia) நகரிலிருந்து எகிப்து பிரமிடு வரை தனது பயணத்தைத் தொடங்குகிறான். இந்தப் பயணம் அவனை எங்கெல்லாம் அழைத்துச் செல்கிறது, எந்தவிதமான கஷ்ட நஷ்டங்களை சந்திக்கிறான், அவன் சந்திக்கும் மனிதர்கள் என பல கடந்து இறுதியில் அவன் தனது கனவில் வந்த புதையலை அடைந்தானா என்பது கதை. இந்த கதை கனவு காண்பவர்களுக்கு அல்லது கனவை நிறைவேற்ற நினைப்பவர்களுக்கும் முக்கியமாக 4 தடைகளை வெளியிட்டு செல்கிறது ஒன்று நமது முன்னால் ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டுள்ள அவநம்பிக்கைகள் அல்லது வழக்கம். இது தாண்டி மீண்டும் நமது கனவுகளின் மீது நம்பிக்கை உண்டென்றால் இரண்டாவதாக வருவது காதல் அல்லது குடும்பம். நம் கணவருக்காக நாம் நம்மை சுற்றியுள்ளவர்களை இழந்துவிடுவோமோ என்ற தவிப்பு. 3 தோல்விகளைக் கண்டு பயம். கனவுகளை மெய்ப்பட முயற்சிக்கும் பொழுது பல தோல்விகளை நாம் சந்திக்க நேரிடும். எல்லாத் தோல்விகளின் இறுதியிலும் நமது கனவுக்கு உரமிட்டு கொண்டே செல்ல வேண்டும். இ...

பட்டத்து யானை & அரியநாச்சி

Image
  பட்டத்து யானை ஆசிரியர்: வேல ராமமூர்த்தி பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் பக்கங்கள்: 376 விலை 300 புத்தக வாசிப்பில் வேகமான வாசிப்பு அனுபவம் தரும் புத்தகங்கள் பல உள்ளன, எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். அதற்கு நேர் எதிரிடையாக சிக்கலான அல்லது ஆழ்ந்த வாசிப்பனுபவம் கோரும் படைப்புகளும் அதிகம் உள்ளது எழுத்தாளர்களும் அதிகம் உள்ளனர். இவற்றில் எதை, யாரை, எப்படி வாசிப்பது என்பதையெல்லாம் வாசகர்கள் தங்களின் விருப்பத்திற்கு தேர்வு செய்து கொள்ளுங்கள். இந்தத் தேர்வுக்கு ஆகச்சிறந்த உதவி தங்களின் சிந்தனை மற்றும் ரசனையாக மட்டுமே இருக்கட்டும். முதல் ரக புத்தகங்களுக்கு வாசகர்கள் தங்களின் சிந்தனை திறன் மற்றும் நேரம் ஆகியவற்றை மிகவும் குறைவாக செலவழிக்க நேரிடும். அப்படிப்பட்ட பல படைப்புகளில் இழையோடும் வேகம், அவற்றின் மேலிடும் வியப்பு அவர்களை புத்தகத்தை கீழே வைக்க விடாது. அப்படி இரண்டு புத்தகங்களை அடுத்தடுத்து படிக்க முடிந்தது. தனுஷ்கோடி வாணிப நகரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வன்முறை நடக்க இருப்பதாக தகவல்கள் வருகிறது. வெள்ளை அதிகாரி லாரன்ஸ் தலைமையில் தனுஷ்கோடி ரயில் நிலையத்தை சோதனை இடுகிறார்கள். சோதனையில் அகப்படா...

பிச்சிப் பூ

Image
  பிச்சிப் பூ பொன்னீலன் நீலன், சின்ன நீலன், மூர்த்தியார் என மூன்று அண்ணன் தம்பிகளை கொண்ட ஒரு குடும்பம். 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்தின் தென்கோடியில் வாழ்ந்த வாழ்க்கையை, இழப்புகளை, வெற்றிகளை, ஏமாற்றங்களை இந்த நாவல் வரைந்து செல்கிறது. நீலன் ஆங்கிலேயர்களின் பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கி, சிறுவயதில் மதச் சிந்தனை சிக்கலுக்கு உள்ளாகி அவரது ஆசிரியர்களால் பேரானந்தம் என்று கிறிஸ்தவராக மாறுகிறார். இந்த மாற்றம் தனது மற்ற இரு சகோதரர்களின் பள்ளி படிப்பை நிறுத்தி வைக்கிறது. ஆனால் பேரானந்தம் தனது படிப்பில் ஆழ்ந்த கவனம் செலுத்தி வக்கீலாக முன்னேறுகிறார் தனது வாழ்வில். சின்ன நீலன் கொடிய நோயில் விழுகிறார். மருத்துவத்திற்காக அண்ணன் உதவியை நாடாமல், சாமிதோப்பு வைகுண்டர் இடம் தன்னை சரணாகதி ஆக்கிக் கொள்கிறார். இந்த வார்ப்பு அவரை எல்லா ஜாதி மக்களையும் ஒன்றுபோல நடத்த சொல்கிறது. ஊருக்கு திரும்பும் அவர் அம்மன் கோவில் எழுப்புகிறார், ஜாதி பாகுபாடற்ற வழிபாட்டு முறையினை முன்னெடுக்க செய்கிறார். மூர்த்தியார் கீர்த்தி ஆழமாக அழுத்தமாக புனையப்பட்டுள்ளது. தற்காப்புக் கலைகள் பல கற்று தேர்ந்தவர் மூர்த்திய...

மனிதகுல வரலாறு

Image
  மனிதகுல வரலாறு எஸ் ஏ பெருமாள் 1) அன்னை பூமி 2) சூரியக் குடும்பம் 3) பூமியின் தோற்றம் 4) மா கடல்கள் 5) உயிரின் உதயம் 6) மனிதக் குரங்கும் குரங்கு மனிதனும் 7) தாய்வழிச் சமூகம் 8) உயிரினங்களின் காதல் 9) டார்வின் கண்டுபிடித்த இயற்கைத் தேர்வு 10) ஆவி உலகமும் மாயக்கண்ணாடியும் 11) அறிவுத் தேடலும் கண்டுபிடிப்புகளும் 12) விஞ்ஞானமும் மானிட வளர்ச்சியும் எஸ் ஏ பெருமாள் அவர்களைப் பற்றியும் விரிவாக விளக்கத் தேவையில்லை. கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். பல புத்தகங்களை எழுதியுள்ளார். மனிதன், மனிதகுலம் அதன் தோற்றம் குறித்து பல புத்தகங்கள் உள்ளன. மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான் என்று ஒரு ரஷ்ய புத்தகத்தை வாசித்தது உண்டு. யுவாள் நோ ஹராரே அவர்களின் சேப்பியன்ஸ் புத்தகமும் வாசித்தது உண்டு. அந்த வரிசையில் இது தனித்துவமான வாசிப்பு அனுபவத்தை தருவது. டார்வின், காரல் மார்க்ஸ் போன்றவர்களின் குறிப்புகள் அதிகம் கையாளப்பட்டுள்ளது. 6 முதல் 9 வரையிலான பகுதிகள் நம்மை அதிகம் சிந்திக்க வைக்கின்றன. அங்கங்கே தமிழகத்தின் சான்றுகளும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதரும் மனித குலம் பற்றி, கருத்துமுதல்வாதம் பொரு...

Ikigai - the japanese secret to a long and happy life

Image
Ikigai - the japanese secret to a long and happy life - அதிக காலம் மற்றும் மகிழ்ச்சியாக வாழ ஜப்பானியர்களின் ரகசியம். Hector Garcia Puigcerver தமிழ் வாசகர்களுக்கு ஆங்கில புத்தகங்களை அறிமுகம் செய்யலாமா என்று அடிக்கடி எழுவதுண்டு இருந்தாலும் நல்லவைகள் எந்த மொழியில் இருந்தாலும் பகிர்ந்து கொள்ளலாம் என்பதற்காக இதை பகிர்கிறேன். மனித வாழ்க்கையின் நோக்கம் என்ன என்கிற ஆய்வு பல தளங்களில் பல இடங்களில் நடந்து கொண்டே இருக்கிறது. மனித வாழ்க்கையின் நோக்கத்தை பற்றிய பல புத்தகங்கள் உலகங்களும் வாசிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. அதில் எனக்கு பிடித்த ஒன்று விக்டர் ஃபிராங்க் எழுதிய man's search for meaning. இந்த புத்தகமும் மனித வாழ்க்கையின் நோக்கத்தை ஆராய்கிறது ஜப்பானியர்களின் வழக்கப்படி. ஜப்பானியர்களின் வாழ்க்கை முறைகள், பழக்கவழக்கங்கள் என கூறுவதற்கு முன்பு உலகில் இதுவரை மனித வாழ்க்கையின் நோக்கம் குறித்த ஆராய்ச்சிகளை ஆய்வு செய்கிறது புத்தகம். உலகில் குறிப்பிட்ட சில பகுதிகளில் வாழும் மனிதர்கள் அதிகப்படியான வயது வரை வாழ்கிறார்கள். அப்படி வாழ்பவர்களில் ஜப்பானில் ஒகினாவா என்ற மாகாணத்தில் வாழும் மக்களும் குறி...