தனது பொக்கிஷத்தை விற்ற துறவி




தனது பொக்கிஷத்தை விற்ற துறவி (The monk who sold his Ferrari)

ராபின் ஷர்மா
விலை 199
பக்கங்கள் 308

சுயமுன்னேற்ற புத்தகங்கள் உண்மையிலேயே வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வருமா என்பது பற்றி அதிகம் யோசித்து கொண்டதில்லை. அது ஒருவேளை வாசிப்பவர்களின் நம்பிக்கையையும் மனநிலையையும் பொருத்தது. இந்தவகை புத்தகங்களில் நமக்கு தெளிவு கிடைக்கிறதோ இல்லையோ பலவகையான சுவாரசிய தகவல்கள் கொண்டிருக்கும்.

நடுத்தர வயது கடந்த ஜூலியன் என்ற வெற்றிகரமான வக்கீல் தொழில் புரிந்த ஒருவர். தான் இந்தியாவின் இமயமலை சிகரங்களில் கற்றதை ஏழு முக்கிய கருத்துக்களாக எடுத்துக்கூறும் நூல் இது. அங்கங்கே வரும் குட்டி கதைகள் புத்தகத்தை வேகமாக நகர்த்துகிறது. நம் பயத்தை நாமே நேர்கொண்டு சந்திக்க வேண்டும், அதை அடித்து வீழ்த்த வேண்டும் என்று கூறும் பக்கங்கள். காலையில் எழுதல், புத்தகம் வாசித்தல் போன்ற கருத்துக்களை கூறும் பகுதிகளும் நன்று.

விதியை நாம் வடிவமைத்துக் கொள்ள முடியும் என்று திடமாக நம்பிக்கை ஏற்படுத்தும் ஆசிரியர் ஆன்மாவை ஒளிரச் செய்ய வேண்டும் என்றும் மெனக்கெடுவது ஏனென்று புரியவில்லை.

கடந்த காலத்தில் வாழாதீர்கள், எதிர்காலத்தை நினைத்து அதிகம் வருந்தாதீர்கள், நிகழ்காலத்தில் வாழுங்கள் என்று கூறும் நூல்களில் இதுவும் ஒன்று. நிகழ்காலத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு பல உதாரணங்களை கொடுத்தும் உள்ளார். அதில் முக்கியமாக ஆசிரியர் அடிக்கடி கூறுவது "இன்று நாம் இறந்து விடப் போவது" போல மனநிலையைக் கொண்டு வாழ்வது.

நிகழ்காலத்தில் வாழ்வதற்கு பாரதி கூறிய மனநிலை எப்படி என்றால் "இன்று புதிதாய் பிறந்தோம்" என்கிறார். இதில் நீங்கள் எவ்வாறு வாழப் போகிறீர்கள் என்று உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

சென்றதினி மீளாது, மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.26410:55 AM

Comments

Popular posts from this blog

கூரைப்பூசணி

கரிசல் கருதுகள்