The Alchemist
- Get link
- X
- Other Apps
The Alchemist
Paulo coelho
தமிழில் ரசவாதி என்ற பெயரில் நாகலட்சுமி சண்முகம் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்.
ஒரு சிறுவன் கனவில் வரும் புதையலைத் தேடி ஸ்பெயின் நாட்டின் அந்தாலூசியா (Andalusia) நகரிலிருந்து எகிப்து பிரமிடு வரை தனது பயணத்தைத் தொடங்குகிறான். இந்தப் பயணம் அவனை எங்கெல்லாம் அழைத்துச் செல்கிறது, எந்தவிதமான கஷ்ட நஷ்டங்களை சந்திக்கிறான், அவன் சந்திக்கும் மனிதர்கள் என பல கடந்து இறுதியில் அவன் தனது கனவில் வந்த புதையலை அடைந்தானா என்பது கதை.
இந்த கதை கனவு காண்பவர்களுக்கு அல்லது கனவை நிறைவேற்ற நினைப்பவர்களுக்கும் முக்கியமாக 4 தடைகளை வெளியிட்டு செல்கிறது ஒன்று நமது முன்னால் ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டுள்ள அவநம்பிக்கைகள் அல்லது வழக்கம். இது தாண்டி மீண்டும் நமது கனவுகளின் மீது நம்பிக்கை உண்டென்றால் இரண்டாவதாக வருவது காதல் அல்லது குடும்பம். நம் கணவருக்காக நாம் நம்மை சுற்றியுள்ளவர்களை இழந்துவிடுவோமோ என்ற தவிப்பு. 3 தோல்விகளைக் கண்டு பயம். கனவுகளை மெய்ப்பட முயற்சிக்கும் பொழுது பல தோல்விகளை நாம் சந்திக்க நேரிடும். எல்லாத் தோல்விகளின் இறுதியிலும் நமது கனவுக்கு உரமிட்டு கொண்டே செல்ல வேண்டும். இறுதியாக நாம் எந்தக் கனவு நினைவாக வேண்டும் என்று வாழ்வின் எல்லா தருணங்களிலும் போராடிக் கொண்டிருக்கிறோம அதை விட்டு விலகாத உறுதிகொண்ட மனம்.26206:16 PM
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment