தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்

 




தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்

பாரதி புத்தகாலயம்
239 பக்கங்கள்
விலை: 150 ரூபாய்

வாசிப்பவருக்கு வாசகன் என்று பெயர் எங்கிருந்து வந்தது என்று எனக்கு புலப்படவில்லை. பிற கலைகளில் அதை உள்வாங்குபவர்களுக்கு பொதுவாக ரசிகன் என்று ஒருமைப் படுத்துதல் சாத்தியம். ஒரு சிற்பியின் நுணுக்கத்தை அறிபவன் ரசிகன், ஒரு ஓவியனின் நுணுக்கத்தை அறிபவன் ரசிகன், இப்படி இன்னும் பல. வாசகன் என்பவனும் எழுத்துக்களை ரசிக்க இவனும் ஒரு ரசிகன் தான், ஆனால் வாசகன் என்ற தனித்த அடையாளம் தரப்பட்டிருக்கிறது. இது எழுத்தாளர்களில் குறுஞ்சதியாக கூட இருக்கலாம். வாசகனுக்கு ஒரு சவுகரியம் என்னவென்றால் எழுத்தாளன் தன் படைப்புகளால் தன் வாசகனை எழுத்தாளராகவும் ஆக்க உந்த செய்யும் சாத்தியக்கூறுகள் பிற கலைகளுடன் ஒப்பிடும்போது எழுத்துலகில் அதிக சாத்தியம் வாய்ந்த ஒன்று என்றும் மேலும் அதற்கான மெனக்கெடல் குறைவு என்று எனக்குப்படுகிறது.

இந்தத் தொகுப்பில் மொத்தம் 32 கதைகள் உள்ளது. பூ என்ற தமிழ் படத்தின் மூல சிறுகதையான வெயிலோடு போய் என்ற சிறுகதையும் இதில் அடக்கம்.

கண்முன் கொட்டிக்கிடக்கும் ஆசைகளை, அன்பை, அலட்சியகளை, ஏமாற்றத்தை எளிமையான எழுத்துக்களின் மூலம் கை கொள்ளப் பெற்றவர் ச தமிழ்ச்செல்வன். ஒரு ஜாதிய கூட்டுக்குள் அடைபடும் எழுத்தாளர் என்ற வகையில் இவரை அடையாள படுத்திவிட முடியாது.

பிள்ளையாரு நம்ம ஊர் சாமி, அவருக்கு எப்படி இங்கிலீஷ் தெரியும் என்று ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண் பெற சர்ச்சுக்கு போய் வணங்கும் சிறுவனின் அக உலகம். பாட்டு கேட்கிறது அப்படி என்ன தப்பா என்று கணவருடன் கேள்வி கேட்கும் பெண்ணின் மனம். மாத செலவு போக மீதமிருந்த 60 ரூபாய் மனிதனாக மாறி தோளில் கை போட்டுக்கொண்டு என்னை என்ன செய்யப் போகிறாய் என்று கேட்கும் விந்தை. ஜாதி ஒரு மலிவான ஆயுதமல்ல, என்னைக் கீழே கிடத்தி மேலேறி அமுக்கும் சுமை என ஒவ்வொரு கதை கொள்ளும் ஒரு நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருக்கின்றன.

Comments

Popular posts from this blog

கூரைப்பூசணி

கரிசல் கருதுகள்