Posts

Showing posts with the label websites

தமிழ் நூல்கள்

  தமிழ் நூல்கள் நமக்கு PDF வடிவில் பல புத்தகங்கள் இலவசமாக கிடைக்கிறது. அவற்றில் நான் சமீபத்தில் பார்த்த இரண்டு இணையதளங்களை இங்கு பகிர்கிறேன். 1)  http://noolaham.org 2)  http://tamildigitallibrary.in/ இரண்டாவதாக உள்ள இணைய தளத்திலிருந்து காசிஆனந்தன் கதைகள் என்று ஒரு புத்தகம் தரவிறக்கம் செய்தேன். அதை இங்கே பகிர்கிறேன் முடிந்தால் இந்த புத்தகத்தை உங்கள் குழந்தைகளுடன் அமர்ந்து வாசித்துக் காட்டுங்கள் மிக அருமையான புத்தகம். 168 09:23 PM

அண்ணாவின் படைப்புக்கள்

Image
  http://www.annavinpadaippugal.info/home.htm அண்ணாவின் எழுத்து நடை,  இன்றும் அவரது தேவை பற்றி   தெரிந்து கொள்ள  வாசிப்போம் இந்த இணையதளத்தை. அண்ணாவின் அனைத்து படைப்புக்களும், பேச்சுக்களும் இந்த தளத்தில் இலவசமாக கிடைக்கிறது.  இதில் இன்று நாம் படித்தது  நேர்ந்தது நீதி தேவன் மயக்கம். மிகவும் குட்டி நூல். " இறக்கம் என்ற பொருள் இல்லாததால் அரக்கன்" என்று கம்பர் வர்ணித்ததால் தண்டனை பெற்ற இராவணனின் வழக்கு மீண்டும் நீதிமன்றம் வருகிறது. இராவணனின் தரப்பு வாதங்கள் இதுதான் கதை. ஆனால் என்னை அரக்கன் என்று கூற யாருக்கும் தகுதி இல்லை ஏன் என்றால் நீங்களும் அரக்கர்கள் என்று முடியும் இராவணனின் வாதம். ராமர், விசுவாமித்திரர், பரசுராம், சிவனடியார் என பலரை விமர்சித்துள்ளார். புராணங்கள் குறித்து சிந்திக்க வைக்கிறார் அண்ணா.