Ikigai - the japanese secret to a long and happy life
Ikigai - the japanese secret to a long and happy life - அதிக காலம் மற்றும் மகிழ்ச்சியாக வாழ ஜப்பானியர்களின் ரகசியம்.
Hector Garcia Puigcerverதமிழ் வாசகர்களுக்கு ஆங்கில புத்தகங்களை அறிமுகம் செய்யலாமா என்று அடிக்கடி எழுவதுண்டு இருந்தாலும் நல்லவைகள் எந்த மொழியில் இருந்தாலும் பகிர்ந்து கொள்ளலாம் என்பதற்காக இதை பகிர்கிறேன்.
மனித வாழ்க்கையின் நோக்கம் என்ன என்கிற ஆய்வு பல தளங்களில் பல இடங்களில் நடந்து கொண்டே இருக்கிறது. மனித வாழ்க்கையின் நோக்கத்தை பற்றிய பல புத்தகங்கள் உலகங்களும் வாசிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. அதில் எனக்கு பிடித்த ஒன்று விக்டர் ஃபிராங்க் எழுதிய man's search for meaning.
இந்த புத்தகமும் மனித வாழ்க்கையின் நோக்கத்தை ஆராய்கிறது ஜப்பானியர்களின் வழக்கப்படி. ஜப்பானியர்களின் வாழ்க்கை முறைகள், பழக்கவழக்கங்கள் என கூறுவதற்கு முன்பு உலகில் இதுவரை மனித வாழ்க்கையின் நோக்கம் குறித்த ஆராய்ச்சிகளை ஆய்வு செய்கிறது புத்தகம்.
உலகில் குறிப்பிட்ட சில பகுதிகளில் வாழும் மனிதர்கள் அதிகப்படியான வயது வரை வாழ்கிறார்கள். அப்படி வாழ்பவர்களில் ஜப்பானில் ஒகினாவா என்ற மாகாணத்தில் வாழும் மக்களும் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களுடன் பயணித்து, இருந்து இந்த புத்தகத்தை எழுதியுள்ளார் ஆசிரியர். இந்த புத்தகத்தை வாசிக்கும் பொழுது மிகவும் விசித்திரமாக இருக்கிறது 90 வயதில் சைக்கிள் ஒட்டக்கூடிய, 95 வயதில் நடனம் ஆடக் கூடிய, 90 வயதுகளில் ஜப்பானிய ஹாக்கி ஆட்டம் ஆடக்கூடிய பல மனிதர்களை எடுத்துக்காட்டுகிறார். ஜப்பானியர்களின் உணவு முறை வாழ்க்கை முறை மற்றவர்களுடன் அவர்கள் கழிக்கும் நேரம் என விளக்குகிறார்.
Comments
Post a Comment