வாய்க்கால்

 


வாய்க்கால்
பூமணி
டிஸ்கவரி புக் பேலஸ்
விலை ரூபாய் 80
80 பக்கங்கள்

கோபால், கோபாலின் அப்பா வள்ளிமுத்து வாத்தியார், கோபாலின் அம்மா நல்ல மணி, வெள்ளையம்மா மதினி, கோபாலின் காதலி லட்சுமி, லட்சுமியின் கணவன் வடிவேலு, கோபாலின் நண்பன் சுருளி முருகன் என பலர் கொண்டு இந்த கதை விரிவடைகிறது.

கோபால் வெளியூரிலிருந்து பிறந்த ஊருக்கு பல வருடங்கள் கழித்து வருகிறான். ஊரில் அவன் சிறுவயதில் கழித்த இடங்களில் கடக்கும் பொழுது அவனது நினைவுகளில் விழும் கீறல்கள் பால்யகால காதலை மெல்ல மெல்ல அவன் சிந்தனையில் பனிதுளிகள் ஆக்குகிறது. அது நம்மையும் சில்லென குளிரச் செய்கிறது. ஊரில் லட்சுமி மட்டும்தான் மேல் வகுப்பு வரை படிக்க சென்றாள், அதுவும் தொடர கொடுத்து வைக்கவில்லை. லட்சுமி படிப்பை தொடர முடியாத பட்சத்தில் கோபால் லட்சுமி இடையே பழக்கவழக்கங்களில் இடைவெளி வருகிறது. மேற்படிப்புக்காக வெளியூர் செல்கிறான் கோபால் திரும்பி வரும்பொழுது அம்மாவின் கட்டாயத்தால் வேறு பெண்ணை மணம் முடிக்கிறான். நினைவுகளில் தவழ்வது சுகம் என்றாலும், அனேக நேரங்களில் எதார்த்தம் வேறு விதத்திலேயே அமைகிறது. லட்சுமிக்கு நடந்த சோகங்களை அதை கடக்க லட்சுமி எடுத்த முடிவுகள் என அனைத்தையும் சுளீர் என்று சாட்டையடி போல் சூழலில் கோபாலுக்கு கொடுக்கிறான். லட்சுமியின் நிகழ்கால சூழல் ஊரின் வாசம் இரண்டையும் சுமந்துகொண்டு கோபால் மீண்டும் ஊருக்கு பஸ் ஏறுகிறான்.

இந்த மையக் கதையின் ஊடே முயல் வேட்டை கற்றுத்தருகிறார் ஆசிரியர். ஒல்லியான உயரமான மூக்கு கூர்ந்த நாய்களை அழைத்துக்கொண்டு கிராமம் மொத்தமாக வேட்டைக்குச் செல்கிறது. பசிக்கு தோட்டங்களில் திருட்டு, கிராமத்துக்கே உரிய நக்கல் பேச்சுக்கள். பெண் முயல் அரை உயிருடன் சிக்கியும் அதன் வயிற்றில் உயிருடன் இருக்கும் முயல் குஞ்சு. என கிராமத்து வேட்டை அருமை. வெள்ளையம்மா மதனுக்கும் கோபாலுக்கும் நடக்குற உரையாடல்கள் தனி அழகு.

September 17

Comments

Popular posts from this blog

கூரைப்பூசணி

கரிசல் கருதுகள்