பிச்சிப் பூ




 பிச்சிப் பூ

பொன்னீலன்

நீலன், சின்ன நீலன், மூர்த்தியார் என மூன்று அண்ணன் தம்பிகளை கொண்ட ஒரு குடும்பம். 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்தின் தென்கோடியில் வாழ்ந்த வாழ்க்கையை, இழப்புகளை, வெற்றிகளை, ஏமாற்றங்களை இந்த நாவல் வரைந்து செல்கிறது.

நீலன் ஆங்கிலேயர்களின் பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கி, சிறுவயதில் மதச் சிந்தனை சிக்கலுக்கு உள்ளாகி அவரது ஆசிரியர்களால் பேரானந்தம் என்று கிறிஸ்தவராக மாறுகிறார். இந்த மாற்றம் தனது மற்ற இரு சகோதரர்களின் பள்ளி படிப்பை நிறுத்தி வைக்கிறது. ஆனால் பேரானந்தம் தனது படிப்பில் ஆழ்ந்த கவனம் செலுத்தி வக்கீலாக முன்னேறுகிறார் தனது வாழ்வில்.

சின்ன நீலன் கொடிய நோயில் விழுகிறார். மருத்துவத்திற்காக அண்ணன் உதவியை நாடாமல், சாமிதோப்பு வைகுண்டர் இடம் தன்னை சரணாகதி ஆக்கிக் கொள்கிறார். இந்த வார்ப்பு அவரை எல்லா ஜாதி மக்களையும் ஒன்றுபோல நடத்த சொல்கிறது. ஊருக்கு திரும்பும் அவர் அம்மன் கோவில் எழுப்புகிறார், ஜாதி பாகுபாடற்ற வழிபாட்டு முறையினை முன்னெடுக்க செய்கிறார்.

மூர்த்தியார் கீர்த்தி ஆழமாக அழுத்தமாக புனையப்பட்டுள்ளது. தற்காப்புக் கலைகள் பல கற்று தேர்ந்தவர் மூர்த்தியார். ஆனால் சமூக சிக்கல்கள் பல அறியாதவர், தற்செயலாக வைக்கத்தில் நடக்கும் போராட்டத்தை கண்டு தன்னை அதனுடன் இணைத்துக் கொள்கிறார். முற்போக்கு சிந்தனை அவரது செயல்களில் வெளிப்படுகிறது. இவரின் மனைவியே பிச்சிப்பூ. பிச்சிப்பூ மூர்த்தியார் திருமணம் ஒரு தற்செயலான சம்பவம். பிச்சி பூவும் அனைத்து தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொள்கிறாள். பிச்சிபூவும் மூர்த்தியாரும் சேர்ந்து துணிந்து செய்யும் கோயில் நுழைவு போராட்டத்தின் மூலம் கதை முடிவுக்கு வருகிறது.

கதையின் களம் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி வரையிலான கடற்கரை ஒட்டிய பரபரப்பு. இம்மக்களின் வாழ்வியல், உணவு பழக்கம், பண்பாடு, சமயம் என அனைத்தும் கச்சிதமாக கையாண்டுள்ளார். அடியேலை, பனந்தந்தி, மீன் மற்றும் பனங்கிழங்கு உண்ணும் முறைகள், பட்டம் என அந்த வட்டாரத்து வழக்கங்களில் பகிர்ந்துள்ளார். மேலும் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் குறிப்பு. ஈத்தாமொழி, ராஜக்கமங்கலம் மக்களின் பண்பாட்டுப் பரிமாற்றம். ஜாதி பாகுபாட்டு பழக்கவழக்கங்கள் என வரலாற்று குறிப்புகளையும் தருகிறார்.

"திருச்செந்தூரில் இருந்து திருவனந்தபுரம் வரைக்கும் அன்னிக்கு ஒரே பனங்காடுதான். திருச்செந்தூர்ல ஒரு பனைல ஏறுன சாமர்த்தியம் உள்ள தொழிலாளி. பனைக்கு பனை தாவி, நொங்கும், பயினியும் சாப்பிட்டுக்கிட்டே திருவனந்தபுரத்தில் இறங்கிடுவேன்." வரிகளை எண்ணி கற்பனை பனை பயணத்தை செய்து கொண்டே இந்த புத்தகம் நிறைவு பெற்றது.20610:07 PM

Comments

Popular posts from this blog

கூரைப்பூசணி

கரிசல் கருதுகள்