கேபிடலிசம் நேஷனலிஸம் கம்யூனிசம் காஸ்டிசம் ஸ்டாக்கிஸம் டார்வினிசம் இன்னும் பல இசங்கள் அம்மா வைக்கும் பருப்புரசம் முன் ...
Posts
இந்துமதம் எங்கே போகிறது?
- Get link
- X
- Other Apps
இந்துமதம் எங்கே போகிறது? அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர் நக்கீரன் பதிப்பகம் விலை 275 ரூபாய் 352 பக்கங்கள் புதுமைப்பித்தன் தன்னுடைய கடவுளின் பிரதிநிதி என்ற சிறுகதையில் இப்படி கூறுகிறார். "திரு சங்கர் சிற்றூரில் தமது தொண்டை பிரச்சாரம் செய்ய வந்தார். அவரும் ஜாதியில் பிராமணர். தியாகம், சிறை என்ற அக்கினியால் புனிதமாக்கப்பட்ட வர். சலியாது உழைப்பவர். உண்மையை ஒளிவு மறைவு இல்லாது போட்டு அடித்து உடைப்பவர்." இந்த வரிகள் சங்கருக்கு பொருந்துகிறதோ இல்லையோ ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்களுக்கு அப்படியே பொருந்துகிறது. இவர் சிறை செல்லாமல் சிந்தனையால் புனிதமாக இருக்கிறார். இந்தியாவில் இருந்த 450 மதங்களில் எது இந்து மதம்? என்ற கேள்வியில் முதல் கட்டுரையை தொடங்கி. ஜாதிகள் தொடக்கம், அதன் விரிவாக்கம். வேதம், மநு, உபநிஷத்துக்கள், உபநயனம் என பலவற்றை எடுத்துக்கூறி அதற்கு தக்க உதாரணமும் கொடுத்துள்ளார். மேலும் வேதம் மற்றும் மநுவுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள். சங்கரர் ராமானுஜர் வியாசர் ஜெய்மினி எனப் பலரின் கதைகள். பல மடங்களின் கதைகள், பல புனித தளங்களின் கதைகள். பல சடங்குகளின் காரணங்கள். இவை எல்லாவ...
வாய்க்கால்
- Get link
- X
- Other Apps
வாய்க்கால் பூமணி டிஸ்கவரி புக் பேலஸ் விலை ரூபாய் 80 80 பக்கங்கள் கோபால், கோபாலின் அப்பா வள்ளிமுத்து வாத்தியார், கோபாலின் அம்மா நல்ல மணி, வெள்ளையம்மா மதினி, கோபாலின் காதலி லட்சுமி, லட்சுமியின் கணவன் வடிவேலு, கோபாலின் நண்பன் சுருளி முருகன் என பலர் கொண்டு இந்த கதை விரிவடைகிறது. கோபால் வெளியூரிலிருந்து பிறந்த ஊருக்கு பல வருடங்கள் கழித்து வருகிறான். ஊரில் அவன் சிறுவயதில் கழித்த இடங்களில் கடக்கும் பொழுது அவனது நினைவுகளில் விழும் கீறல்கள் பால்யகால காதலை மெல்ல மெல்ல அவன் சிந்தனையில் பனிதுளிகள் ஆக்குகிறது. அது நம்மையும் சில்லென குளிரச் செய்கிறது. ஊரில் லட்சுமி மட்டும்தான் மேல் வகுப்பு வரை படிக்க சென்றாள், அதுவும் தொடர கொடுத்து வைக்கவில்லை. லட்சுமி படிப்பை தொடர முடியாத பட்சத்தில் கோபால் லட்சுமி இடையே பழக்கவழக்கங்களில் இடைவெளி வருகிறது. மேற்படிப்புக்காக வெளியூர் செல்கிறான் கோபால் திரும்பி வரும்பொழுது அம்மாவின் கட்டாயத்தால் வேறு பெண்ணை மணம் முடிக்கிறான். நினைவுகளில் தவழ்வது சுகம் என்றாலும், அனேக நேரங்களில் எதார்த்தம் வேறு விதத்திலேயே அமைகிறது. லட்சுமிக்கு நடந்த சோகங்களை அதை கடக்க லட்சுமி எடு...
பிறகு
- Get link
- X
- Other Apps
பிறகு பூமணி காலச்சுவடு பதிப்பகம் விலை 275 ரூபாய் 255 பக்கங்கள் கொரோனா காலம் என்று தனக்காக ஒரு வரலாற்றையே கட்டமைத்துக் கொண்டிருக்கிறது கண்ணுக்கு தெரியாத கிருமி. இன்னும் சில நாட்களில் மருத்துவரீதியாக கொரோனா பெற்ற ஜாதி. கொரோனா இல்லாத ஜாதி என்று மனித இனங்கள் பிரிக்கப்பட்டு விடுமோ என்று சந்தேகமாக உள்ளது. ஏதோ ஒரு தட்டு மக்களுக்கு மட்டும் இந்த நோய் என்பது போய் என்று எல்லாத் தட்டு மக்களுக்கும் பரவியிருக்கிறது. இந்த நோயின் தாக்கம் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை எந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை எண்ணிப்பார்க்க மனம் சற்றே கனக்கிறது. இந்த சூழலிலும் அதிகாரம், அறம் தவறி நிகழ்த்தும் தவறுகள் வருத்தத்திற்குரியது. மனம் அறம் பற்றி மனிதம் காக்க வேண்டிய தருணங்கள் இவை நண்பர்களே! மணலூத்து சக்கிலிய குடிக்கு மணலூத்தின் ஊர் பெரியவர்களால் துரைசாமிபுறத்திலிருந்து இடம் பெறுகிறான் கதையின் மையப் பாத்திரம் அழகிரி. அழகிரியின் தொழில் செருப்பு மற்றும் தோல் பொருட்கள் தைத்தல் குறிப்பாக விவசாயிகளுக்கு பயன்படும் நீர் இறைக்கும் கமலம் தைத்தல். இடம்பெயர்ந்த அழகிரியின் தோராயமாக இருபது ஆண்டுகால வாழ்க்கையை அவன் சந்திக...
காடோடி
- Get link
- X
- Other Apps
காடோடி நக்கீரன் காடோடி பதிப்பகம் விலை: 300 ரூபாய் பக்கங்கள்: 312 மொழிபெயர்ப்பு சாராத தமிழ் நாவல்கள் பொதுவாக தமிழகம் சார்ந்து அல்லது இந்தியா சார்ந்து களமாகக் கொண்டு அதிகம் எழுதப்படுகிறது. இதில் விதிவிலக்காக அவ்வப்போது வேறு நாட்டை கதைக்களமாகக் கொண்டு கதைகளும் எழுதப்படுகிறது. அந்தவகையில் இந்திரா பார்த்தசாரதி எழுதிய ஏசுவின் தோழர்கள் போல காடோடியின் கதைக்களமும் அந்நிய மண். துவான் போர்னிய நாட்டின் காட்டுக்குள் மரம் அறுக்கும் நிறுவனத்தின் மேற்பார்வையாளர். உமர், பிலியவ், அன்னா, ஜோஸ், ரலா, குணா, குவான், பார்க், ஆங் போன்ற பாத்திரங்களை வைத்து கதை கையாளப்படுகிறது. ஆசிரியர் நம்மை கை பிடித்து காட்டுக்குள் அழைத்துச் சென்று அதன் அழகை, இசையை, தூய்மையை, பிரமிப்பை, தொடர்பை வாசிப்பின் மூலம் நமது ஐம்பொறிகளால் உணர வைக்கிறார். தும்பிக்கை குரங்குகளில் தொடங்கி பல விலங்குகள், இரு வாசிகள் பறவைகள், மீன்கள், மனிதர்களின் மூதாதையரான குரங்குகளுக்கு மூதாதையர்கள் எனப்படும் லீமர், துபையா போன்ற அணில் வகைகள், பூச்சியினங்கள், மர வகைகள், நீர்வழிப் பாதைகள் என அனைத்து குறிப்புகளும் சுவாரசியம். நட்பை நட்பாகவும் காதலை காதல...
தனது பொக்கிஷத்தை விற்ற துறவி
- Get link
- X
- Other Apps
தனது பொக்கிஷத்தை விற்ற துறவி (The monk who sold his Ferrari) ராபின் ஷர்மா விலை 199 பக்கங்கள் 308 சுயமுன்னேற்ற புத்தகங்கள் உண்மையிலேயே வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வருமா என்பது பற்றி அதிகம் யோசித்து கொண்டதில்லை. அது ஒருவேளை வாசிப்பவர்களின் நம்பிக்கையையும் மனநிலையையும் பொருத்தது. இந்தவகை புத்தகங்களில் நமக்கு தெளிவு கிடைக்கிறதோ இல்லையோ பலவகையான சுவாரசிய தகவல்கள் கொண்டிருக்கும். நடுத்தர வயது கடந்த ஜூலியன் என்ற வெற்றிகரமான வக்கீல் தொழில் புரிந்த ஒருவர். தான் இந்தியாவின் இமயமலை சிகரங்களில் கற்றதை ஏழு முக்கிய கருத்துக்களாக எடுத்துக்கூறும் நூல் இது. அங்கங்கே வரும் குட்டி கதைகள் புத்தகத்தை வேகமாக நகர்த்துகிறது. நம் பயத்தை நாமே நேர்கொண்டு சந்திக்க வேண்டும், அதை அடித்து வீழ்த்த வேண்டும் என்று கூறும் பக்கங்கள். காலையில் எழுதல், புத்தகம் வாசித்தல் போன்ற கருத்துக்களை கூறும் பகுதிகளும் நன்று. விதியை நாம் வடிவமைத்துக் கொள்ள முடியும் என்று திடமாக நம்பிக்கை ஏற்படுத்தும் ஆசிரியர் ஆன்மாவை ஒளிரச் செய்ய வேண்டும் என்றும் மெனக்கெடுவது ஏனென்று புரியவில்லை. கடந்த காலத்தில் வாழாதீர்கள், எதிர்காலத்தை நினைத்து அ...
தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்
- Get link
- X
- Other Apps
தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் பாரதி புத்தகாலயம் 239 பக்கங்கள் விலை: 150 ரூபாய் வாசிப்பவருக்கு வாசகன் என்று பெயர் எங்கிருந்து வந்தது என்று எனக்கு புலப்படவில்லை. பிற கலைகளில் அதை உள்வாங்குபவர்களுக்கு பொதுவாக ரசிகன் என்று ஒருமைப் படுத்துதல் சாத்தியம். ஒரு சிற்பியின் நுணுக்கத்தை அறிபவன் ரசிகன், ஒரு ஓவியனின் நுணுக்கத்தை அறிபவன் ரசிகன், இப்படி இன்னும் பல. வாசகன் என்பவனும் எழுத்துக்களை ரசிக்க இவனும் ஒரு ரசிகன் தான், ஆனால் வாசகன் என்ற தனித்த அடையாளம் தரப்பட்டிருக்கிறது. இது எழுத்தாளர்களில் குறுஞ்சதியாக கூட இருக்கலாம். வாசகனுக்கு ஒரு சவுகரியம் என்னவென்றால் எழுத்தாளன் தன் படைப்புகளால் தன் வாசகனை எழுத்தாளராகவும் ஆக்க உந்த செய்யும் சாத்தியக்கூறுகள் பிற கலைகளுடன் ஒப்பிடும்போது எழுத்துலகில் அதிக சாத்தியம் வாய்ந்த ஒன்று என்றும் மேலும் அதற்கான மெனக்கெடல் குறைவு என்று எனக்குப்படுகிறது. இந்தத் தொகுப்பில் மொத்தம் 32 கதைகள் உள்ளது. பூ என்ற தமிழ் படத்தின் மூல சிறுகதையான வெயிலோடு போய் என்ற சிறுகதையும் இதில் அடக்கம். கண்முன் கொட்டிக்கிடக்கும் ஆசைகளை, அன்பை, அலட்சியகளை, ஏமாற்றத்தை எளிமையான எழுத்துக்களின் மூ...