கரிசல் கருதுகள்

 


கரிசல் கருதுகள்
சிறுகதை தொகுப்பு:
உதயசங்கர், லட்சுமண பெருமாள்.

குடும்பத்தை அழைத்துக் கொண்டு உறவினர்களின் வீடுகளுக்கு சென்று விட்டு வரும் இன்பம் தனி அலாதிதான். அப்படி ஒரு இன்பம் கிட்டியது பிள்ளைகளுக்கான இந்த காலாண்டு விடுமுறையில். எல்லா உறவினர்களின் வீடுகளிலும் அவர்களை நலம் விசாரித்த பிறகு நம்மை நலம் விசாரிக்க சில புத்தகங்கள் கிடைக்கும். அப்படி எனது அக்கா வீட்டில் கிடைத்த புத்தகம் தான் கரிசல் கருதுகள்.

23 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது. ஒவ்வொரு கதைகளும் தனக்கான தாக்கத்தை பதிவை அழகாக தக்க வைக்கிறது. இந்த 23 ஆசிரியர்களில் சிலரை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். சிலரை இப்போதுதான் வாசித்திருக்கிறேன். நண்பர்கள் யாராவது கரிசல் / வட்டார எழுத்துக்களை வாசிக்க வேண்டும் என்று எண்ணுவார்கள் என்றால் இந்த புத்தகத்தை நிச்சயம் பரிந்துரை செய்வேன்.18005:30 PM

Comments

Popular posts from this blog

கூரைப்பூசணி