காமராஜர் கொலை முயற்சி சரித்திரம் - கி வீரமணி.

வரலாற்றை படிக்க படிக்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. 1966 நவம்பர் 7ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் மீது சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறை ஒரு தாக்குதல் நடத்தப்படுகிறது. நடத்தியவர்கள் யாரும் அல்ல இப்போது பசு பாதுகாவலர்களாக செயல்படும் அதே கூட்டம். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சட்டரீதியாக பசுக்களை வெட்டுவதை தடை செய்ய மறுக்கிறார். இதன் விளைவாக ஒரு கலவரம் வெடிக்கிறது தலைநகர் டெல்லியில். அதில் காங்கிரஸ் கட்சித்தலைவர் காமராஜர் அவர்களின் வீடும் தீகிறையக்கபடுகிறது. அவர் இந்த அசம்பவிததில் இருந்து தப்புகிரார். அதை விவரமாக எழுதுகிறார் வீரமணி. அப்போதைய பத்திரிகைகளின் செய்தி, புகைப்படங்கள் எடுத்து விளக்குகிறார்.

தி க தலைவராக இருந்தாலும், தி மு கவை வறுத்தெடுக்கும் காமராஜரின் உரைகளை நீக்காமல் இருப்பது பெரியார் கற்றுக்கொடுத்த ஒழுக்கம் போல். இந்த செயலுக்கு பெரியார் கூறும் எதிர்ப்பு அருமை. "கத்திவைத்து கொள்ளுங்கள்! காமராஜரை பாதுகாருங்கள்! மறுபடியும் எழுத இடம் வைத்துகொள்ளதீர்கள். கண்டிப்பாய் கத்தி வைத்துக்கொள்ளுங்கள்.".

புத்தகம் படித்தால் பல சிந்தனைகளை ஏற்படுத்துகிறது. பார்ப்பனர்களை எதிர்த்த
தி மு க வெற்றி பெற்றது பார்ப்பனர்களின் உதவியுடன் (1967 தேர்தலில் ராஜாஜியும் கூட்டணியில் இருந்துள்ளார்.). காமராஜர் வெறும் தி மு கவுடன் தோர்க்கவில்லை. அதன் பின் ஒரு பெரிய ஆதிக்கவர்க்க சதி இருந்திருக்கிறது. இந்த புத்தகத்தில் வரும் பெரியார் மற்றும் காமராஜ் அவர்களின் உரைகளின் படி, உண்மையில் காமராஜரின் மற்றும் பெரியாரின் கனவு மிகப்பெரியது. இருவரும் சமதர்ம மக்களாட்சியின் உன்னததையும், பிறப்பால் யாரும் உயர்தவனும் இல்லை தாழ்ந்தவன் இல்லை, ஒழுக்கம் ஒன்றே உயர்ந்த கடவுள் என்றே கூறுகிறார்கள். ஆனால் இது ஒரு கூட்டத்திற்கு புகைச்சலை உண்டுபண்ணுகிறது. இன்று காமராஜரின் குல வாரிசுகள் அதே புகைச்சல் கூட்டத்தில் பின் நிற்கிறது. பிறப்பால் உயர்ந்தவன் என்று நினைக்கும் கூட்டம் அதே சுகபோக வாழ்க்கை பிடத்தை விட்டு இறங்க அடம்பிடிக்கிறது.

Comments

Popular posts from this blog

கூரைப்பூசணி

கரிசல் கருதுகள்