- Get link
- X
- Other Apps
உரைகல், தொ. பரமசிவன். கலப்பை பதிப்பகம். நம் சகவாழ்வின் நிகழ்வுகளில் / சடங்குகளில் மறைதிருக்கும் வரலாற்றை நாம் எப்போதும் கண்டுகொள்வதில்லை. இதே தளத்தில் இயங்கிய அல்லது இயங்கும் ஆளுமைகளை இந்தபுத்தகத்தில் நமக்கு அடியாளப்படுத்துகிறார் ஆசிரியர். தமிழகத்தில் சமணமத்தின் தாக்கங்கள் இன்றளவும் மாறுபட்ட வடிவத்தில் நாம் தொடருவதை எப்போதும் நினைவுறுத்தும் ஆசிரியர், இதில் காஞ்சி மடம் மற்றும் மதுரை குறித்து தரும் குறிப்புகள் நன்று. நம் உணவு மற்றும் மருந்து கலாச்சாரம் சிதைவதை குட்டும் தொ. பாவின் கட்டுரைகள் நாம் நிச்சயம் சிந்திக்காமல் ஒதுக்கிவிட முடியாது. சிறுதெய்வ வழிபாடு, நாட்டார் வாழ்வியல் பற்றி அதிகம் சிந்திக்கும் ஆசிரியரின் இலக்கிய அறிவுலகம் அருமை. தொ பாவின் படைப்புதொனி அவரின் பிற படைப்புகளில் இருந்து மாறவில்லை என்பது சிறப்பு. ஆசிரியரின் பிற முக்கிய புத்தகங்கள் பண்பாட்டு அசைவுகள், தெய்வம் என்பதோர்.
--- Tuesday, April 11, 2017 ---
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment