அர்ஜுனனின் தமிழ் காதலிகள்

 



அர்ஜுனனின் தமிழ் காதலிகள்

அ. கா. பெருமாள்

அ. கா. பெருமாள் பற்றி அதிகம் கூற தேவையில்லை தமிழ்நாட்டு நாட்டார் வழக்கங்களை மரபுகளை பல தலங்களில் ஆய்வு செய்து கிட்டத்தட்ட 80 புத்தகங்களுக்கு மேல் எழுதி இருப்பவர்.

இந்த புத்தகம் மகாபாரத மூலக் கதையிலிருந்து விலகி அதன் தொடர்ச்சியை எழுதிய சில நூல்களின் விளக்க தொகுப்பு. மகாபாரதம் என்ற காவியம் எல்லா தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கப்பட்டது இதுபோன்ற நாட்டார் கதைகளின் வழியாக இருக்கலாம்.

இந்த புத்தகம் படிக்கும் முன்பு வரை அல்லி அர்ஜுன என்கிற வார்த்தை எதற்காக உபயோகிக்கப் பட்டது என்பது எனக்கு தெரியாது. அல்லி மதுரையை ஆண்ட அரசி அர்ஜுனன் பாண்டவர்களின் ஒருவன். வட நாட்டிலிருந்து வந்து மதுரையின் அரசியை மணம் முடிக்கிறான். அதற்கு கிருஷ்ணன் துணை செய்கிறான். அர்ஜுனன் செல்லுமிடங்களில் எல்லாம் பெண்களின் மேல் மயக்கம் கொள்கிறான். அவர்களை அடைய கிருஷ்ணன் உதவி புரிகிறான். இவற்றைத் தாண்டி பிற கதை மாந்தர்களையும் சுவாரசியமாக அதீத கற்பனையுடன் இந்த நூல் விளக்குகிறது.

திரௌபதிக்கு கர்ணனின் மேல் ஒரு கரிசன அல்லது காதல் பார்வை இருந்திருக்கிறது. கர்ணன் தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் என்று எண்ணி கர்ணனின் மனைவி இல்லற வாழ்க்கையை பகிராமல் தவிர்த்தது. கிருஷ்ணன் தனது மகளை துரியோதனின் மகனுக்கு மணம் முடிக்க சம்மதித்தல். பாண்டவர்களின் நீண்ட வனவாசம். வனவாச நேரத்தில் துரியோதனன் கொடுத்த இடர்கள். மன வாசத்திற்கு பின் போரில் வெற்றி கொள்ள அர்ஜுனன் தொடங்கிய மகா தவம் என பல இடங்களை தொட்டுச் செல்கிறது இந்த புத்தகம். அந்தக் கால மனிதர்களின் கற்பனை எப்படி எல்லாம் இருந்தது என்பதற்கு இந்தக் கதைகளும் ஒரு சாட்சியம்.

Comments

Popular posts from this blog

கூரைப்பூசணி

கரிசல் கருதுகள்