மனிதகுல வரலாறு
மனிதகுல வரலாறு எஸ் ஏ பெருமாள் 1) அன்னை பூமி 2) சூரியக் குடும்பம் 3) பூமியின் தோற்றம் 4) மா கடல்கள் 5) உயிரின் உதயம் 6) மனிதக் குரங்கும் குரங்கு மனிதனும் 7) தாய்வழிச் சமூகம் 8) உயிரினங்களின் காதல் 9) டார்வின் கண்டுபிடித்த இயற்கைத் தேர்வு 10) ஆவி உலகமும் மாயக்கண்ணாடியும் 11) அறிவுத் தேடலும் கண்டுபிடிப்புகளும் 12) விஞ்ஞானமும் மானிட வளர்ச்சியும் எஸ் ஏ பெருமாள் அவர்களைப் பற்றியும் விரிவாக விளக்கத் தேவையில்லை. கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். பல புத்தகங்களை எழுதியுள்ளார். மனிதன், மனிதகுலம் அதன் தோற்றம் குறித்து பல புத்தகங்கள் உள்ளன. மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான் என்று ஒரு ரஷ்ய புத்தகத்தை வாசித்தது உண்டு. யுவாள் நோ ஹராரே அவர்களின் சேப்பியன்ஸ் புத்தகமும் வாசித்தது உண்டு. அந்த வரிசையில் இது தனித்துவமான வாசிப்பு அனுபவத்தை தருவது. டார்வின், காரல் மார்க்ஸ் போன்றவர்களின் குறிப்புகள் அதிகம் கையாளப்பட்டுள்ளது. 6 முதல் 9 வரையிலான பகுதிகள் நம்மை அதிகம் சிந்திக்க வைக்கின்றன. அங்கங்கே தமிழகத்தின் சான்றுகளும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதரும் மனித குலம் பற்றி, கருத்துமுதல்வாதம் பொரு...