Posts

Showing posts from October, 2019

கரிசல் கருதுகள்

Image
  கரிசல் கருதுகள் சிறுகதை தொகுப்பு: உதயசங்கர், லட்சுமண பெருமாள். குடும்பத்தை அழைத்துக் கொண்டு உறவினர்களின் வீடுகளுக்கு சென்று விட்டு வரும் இன்பம் தனி அலாதிதான். அப்படி ஒரு இன்பம் கிட்டியது பிள்ளைகளுக்கான இந்த காலாண்டு விடுமுறையில். எல்லா உறவினர்களின் வீடுகளிலும் அவர்களை நலம் விசாரித்த பிறகு நம்மை நலம் விசாரிக்க சில புத்தகங்கள் கிடைக்கும். அப்படி எனது அக்கா வீட்டில் கிடைத்த புத்தகம் தான் கரிசல் கருதுகள். 23 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது. ஒவ்வொரு கதைகளும் தனக்கான தாக்கத்தை பதிவை அழகாக தக்க வைக்கிறது. இந்த 23 ஆசிரியர்களில் சிலரை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். சிலரை இப்போதுதான் வாசித்திருக்கிறேன். நண்பர்கள் யாராவது கரிசல் / வட்டார எழுத்துக்களை வாசிக்க வேண்டும் என்று எண்ணுவார்கள் என்றால் இந்த புத்தகத்தை நிச்சயம் பரிந்துரை செய்வேன். 180 05:30 PM

அறியப்படாத தீவின் கதை

Image
  அறியப்படாத தீவின் கதை தமிழில் ஆனந்த் மிகவும் குட்டி கதை. 36 பக்கங்களைக் கொண்ட ஒரு கதை. மக்களிடமிருந்து செலவுகளை மட்டும் பெறும் ஒரு அரசன். மக்களின் விண்ணப்பங்கள் வரும் கதவுகள் அரசன் வருவதே இல்லை. அப்படி ஒரு அரசனிடமிருந்து ஏழை ஒருவன் மிகவும் பொறுமையாக காத்திருந்து தன் வாதத்தினால் ஒரு கப்பலை மட்டும் வாங்குகிறான் அறியப்படாத தீவை காண்பதற்காக. கடைசியாக அவன் அந்தக் கப்பலில் பயணித்து அறியப்படாத தீவை கண்டானா என்பது மீதி கதை. ஆனந்தின் எழுத்துக்கள் எப்பொழுதுமே புரிந்தது போன்று புரியாத நிலைக்கு நகரும் ஒரு சூட்சமம் கொண்டவை. இந்த மொழிபெயர்ப்பு அப்படி ஒரு நிலைக்கு நம்மை நகர்த்தவில்லை.

கூரைப்பூசணி

Image
  கூரைப்பூசணி பாலகுமாரன் வாசக நண்பர் ஒருவரிடம் வேள்பாரி குறித்து உரையாடிக்கொண்டிருந்தபோது, பேச்சு வரலாறு ஆன்மீகம் குறித்து செல்கையில் நண்பர் உடனடியாக பிடித்தது பாலகுமாரனை. பாலகுமாரனின் அனைத்து ஆக்கங்களையும் படித்து இருப்பதாக கூறினார். ஒன்றை வாசித்து விடுவோமே என்று நண்பரிடம் வாங்கிய புத்தகம் இந்த கூரை பூசணி. இந்த புத்தகம் ஐந்து பெரும் கதைகளை தொகுப்பாகக் கொண்டுள்ளது. கூரை பூசணி : ஒன்பது பிள்ளைகளைப் பறிகொடுத்து விட்டு பத்தாவதாக ஒரு பிள்ளையை மடாதிபதி துறவியாக பிடுங்கிக் கொள்ளும் போது. மகனுக்கும் தாய்க்கும் ஆனா ஒரு பாச போராட்டம். யானைபாலம்: இது ராஜேந்திர சோழன் காலத்தில் நடந்த ஒரு கதை. ராஜேந்திர சோழன் வடநாட்டுக்கு படையெடுத்துச் செல்லும் பொழுது மஹா நதியை கடக்க என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருந்த வேளையில். அவனுக்கு படையின் மூத்த தளபதி கொடுத்த ஒரு அறிவுரையின்படி அவனது 300 யானைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு பாலம் அமைத்த வரலாற்று கதையை பதிவிடுகிறார். செம்மை: இது ஒரு மகாபாரத துணை கதை. கிருஷ்ணன் தன்னை கட்டிப்போட மகாதேவனுக்கு கற்றுக்கொடுக்கும் ஒரு கதை. இந்தக் கதையில் மேலும் சுவாரசியமாக த...