வீர யுக நாயகன் வேள்பாரி

 



வீர யுக நாயகன் வேள்பாரி.
சு. வெங்கடேசன்.

ஆனந்த விகடனில் தொடராக வந்து பெரும் வரவேற்பை பெற்ற சரித்திர தொடர்கதை. பல சிறந்த ஓவியங்களை கொண்டுள்ளது தனி அழகு. பாரியின் ஒட்டுமொத்த வாழ்க்கை தொகுப்பாக இந்த தொடர் அமையவில்லை என்ற ஒரு வருத்தம். வாணிபம், பொருள் ஈட்டல் இதன் பொருட்டு மனிதன் மீறும் அறங்கள் பல, அவற்றில் ஒரு முகத்தை பார்க்க முடிகிறது. பறம்பு நாட்டின் இயற்கை செல்வம், இயற்கை அறிவு , பாரியின் புகழ் பொறுக்காத மூவேந்தர்கள் தனித்தனியே போரிட்டு தோற்று. பின் மூவரும் ஒன்று இணைந்து போர் புரிகிறார்கள். ஆசிரியரும் கதையை சுபமாகவே முடிக்கிறார்.

பறம்பு நாட்டில் தஞ்சம் அடைந்து வாழும் சிறு குடிகளின் கதைகள், கபிலர் - திசை வேளர் உரையாடல், இயற்கையை புரிந்து வைத்திருக்கும் மக்கள், கலப்புமணம் அங்கீகரிக்கும் பாரி, காதல், வஞ்சகம், சதி, வீரம், போர், அதி முக்கியமாக போரின் களம், குணம் பற்றி ஒரு ஆழ்ந்த பார்வை, அதிகப்படியான கற்பனை என கதை பின்னபட்டு இருக்கிறது.

கோல் சொல்லாதே என்று பிள்ளைகளை அடிக்கடி நாம் கூறுவது உண்டு. கோல் சொல்லிகள் போரில் அதன் அறம் காக்கும் பணி செய்பவர்கள் என்பது, வேள், தேவவாக்கு விலங்கு மருவி தேவாங்கு என பல தரவுகள் புதிதாக படித்தது. நிச்சயம் ஒருமுறை படியுங்கள் வேள் பாரியை.

இதில் இருந்த பல கிளை கதைகள் மற்றும் கற்பனை பகுதிகளை என் குழந்தைகள் விரும்பி கதைகளாக கேட்டனர்.
_______________________________________


அறிவியல் கதைகள்
பெ.நா. அப்புஸ்வாமி

14 அறிவியல்சிறுகதைகள் தொகுப்பு இந்தப் புத்தகம். சில கதைகள் ஏற்கனவே நாம் படித்தது போல் தோன்றினாலும் மறுவாசிப்புக்கு அழகாக உள்ளது. குறிப்பாக தீபாவளி பலகாரம் என்ற சிறுகதை நம் வயிறு படும் அவஸ்தையை மிகவும் வேடிக்கையாக கூறுகிறது. அதேபோல் மனிதன் காபியை கண்டறிந்த நான் அரசனாக இருந்தால் என்ற சிறுகதையும் வேடிக்கை. நட்சத்திரம் கிரகங்கள் சூரியன் என பல சிறுகதைகள் விண்வெளி ஆராய்ச்சியை முன்வைத்து அமைந்திருப்பது நல்ல பல விளக்கங்களைத் தருகிறது.


Comments

Popular posts from this blog

கூரைப்பூசணி

கரிசல் கருதுகள்