வெக்கை

 



வெக்கை: பூமணி


1982இல் வெளிவந்த நாவல். ஒரு குற்றம் எப்போதும் தனித்து நின்று விடுவதில்லை. அது ஒரு சங்கிலி, குற்றத்தின் கின்னிகள் கோர்த்துகொண்டே செல்லும். இது மனித மனதின் பழிவாங்கும் குணத்தின் வெளிப்பாடு. அப்படி தன் அண்ணனின் மரணத்திற்கு பழிவாங்கும் 15 சிறுவன் அவனது குடும்பம் படும் பாடு இந்த நாவல்.

நீதியும், அதிகாரமும் இருப்பவன் செய்யும் குற்றத்தை மிகை படுத்துவதை விட அவர்களுக்கு பல சலுகைகள் வழங்கும். இல்லாதவன் செய்யும் குற்றத்தை அதற்கு எதிரடையாகவே அணுகும் என்று உணர்த்துகிறது. ஒரு குடும்ப உறுப்பினர் யாராலோ கொல்ல படும்போது குடும்பம் படும் வேதனை, அதை காலம் என்ற மருந்து எளிதில் கரைத்துவிட முடியாது. அதுவும் கொலை செய்தவன் கண் முன்னால் நல்லவணக்கபடும் போது. மனதின் வேதனை குரூரமாக மாறுகிறது. இதுவே மனித மிருகத்தின் தடம்.

பொதுவாக வட்டார வழக்குகளில் நாவல் வாசிக்கும் போது. அது தனி அலாதிதான், கீ ரா, சோலை சுந்தர பெருமாள், மேலாண்மை பொன்னுசாமி மட்டும் அறிந்த எனக்கு தேவி பாரதியின் முன்னுரை பலரை அறிமுகம் செய்தது.
மு சுயம்புலிங்கம், வீர வேலுசாமி, அ முத்தானந்தம். மண்ணின் மணங்களை எப்போதும் நுகர செய்கிற வட்டார வழக்கு எழுத்தாளர்கள் மற்றும் அவர்களின் எழுத்துக்கள் நிச்சயம் தமிழ் சமூகம் வாசிக்க வேண்டிய ஒன்று.

Comments

Popular posts from this blog

கூரைப்பூசணி

கரிசல் கருதுகள்