குற்றப்பரம்பரை




 குற்றப்பரம்பரை : வேல ராமமூர்த்தி. டிஸ்கவரி பதிப்பகம்.


இந்த நாவலை வாசிக்க முக்கிய காரணம் இயக்குனர் பாலா மற்றும் பாரதிராஜா அவர்களுக்கு இடையில் இந்த நாவலை படமாக்க எழுந்த விவாதங்கள். தமிழிசையின் கற்றபரம்பரை மற்றும் குற்றபரம்பரை என்ற ஒரு டிவிட், மேலும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் குற்றப்பரம்பரை குறித்த தகவல்கள் என எல்லாம் சேர்த்து படிக்க நினைத்து இருந்தேன்.

மூன்று நாட்களில் படித்து முடிக்க முடிந்தது. அப்படி ஒரு வேகம் கதையில். கொம்பூதி, பெருநாழி, பெருமச்சேரி மூன்று கிராம மக்களின் வாழ்வியல், துரோகம், பகை என அனைத்தும் கலந்த கதை. கொம்பூதி கள்ளர்களின் கிராமம் அவர்களுக்கு தொழில் கொள்ளை. அதை விட்டு வேறு தொழில் அறியாதவர்கள். அவர்களுக்கு கட்டுப்பாடு, ஒழுக்கம், கலாச்சாரம் எல்லாம் அவர்களே வகுத்தது. ஒரு கலவரத்தில் உயிர் பிழைத்து வந்த கொம்பூதி மக்களை
காப்பாற்றி அங்கே குடி அமர உதவியவர்கள் பெருமச்சேரி ஏழை மக்கள். பெருமச்சேரி மக்களை தீண்ட தகாதவர்களாக கருதும் மேட்டு குடி ஊர் பெருநாழி. கள்ளர்கள் கொள்ளை அடிக்கும் பொருட்களை கள்ளர்களிடம் இருந்து தானியங்களுக்கு வாங்கும் மனிதரும் பெருநாழி ஊர்க்காரர். நட்பு ஊருக்கு நிகழும் தீண்டாமையை எதிர்த்து கிளம்பும் கொம்பூதி மக்களுக்கு என்ன நிகழ்கிறது? இதற்கு பெருநாழி நாடும் உதவி வெள்ளையர்கள். அவர்களின் அணுகுமுறை. என விரிகிறது கதை.

பெருங்கதை ஒன்றில் பல உபகதைகள், கோபல்ல கிராமம் நாவல் போல அமைத்து இருக்கிறார் ஆசிரியர். முக்கிய கதையுடன் நடைபோட்டு வரும் நாகமுனி, ஹசார் தினார் கதை எனோ ஒட்டவில்லை.

நமக்கு அடிமைகளாய் இருக்கும் மக்கள் மட்டும் போதும். வீரம், கோபம் கொண்ட மக்களை அழிப்பது, அவற்றுக்காக சட்டங்கள் இயற்றுவது என்ற அதிகார வர்க்கத்தின் வரலாற்று பக்கங்களை அசைபோடுகிறது நாவல்.

Comments

  1. It is licensed by eCOGRA and it's considered some of the revered gambling sites in Canada. At JackpotCity Casino, you get access to the whole Loyalty Program on the community. The 로스트아크 system generates Loyalty Points when betting actual cash on casino games. The variety of factors you earn in a calendar month determines your Loyalty Level. Each level has set rewards, and the upper you go, the higher the perks get. Plus, find a way to|you possibly can} at all times change your amassed factors into bonus credits at a fee of 5,000 factors for 5 credits.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கூரைப்பூசணி

கரிசல் கருதுகள்