மாபெரும் தமிழ் கனவு
- Get link
- X
- Other Apps
மாபெரும் தமிழ் கனவு - இந்து தமிழ் திசை வெளியிடு.
தமிழ் இந்து குழுமம் திராவிட அரசியல் புத்தகங்கள் வெளியிட்டு வருகின்றது. தெற்கில் இருந்து ஒரு சூரியன் என முதலில் கருணாநிதி குறித்து வெளிவந்தது. பின் மாபெரும் தமிழ் கனவு என அண்ணாவை குறித்து வெளிவந்து இருக்கிறது.
அண்ணாவை குறித்து இப்போது ஏன் வாசிக்க வேண்டும், அதுவும் 800 பக்கங்கள் கொண்ட புத்தகம் என்று யோசித்து கொண்டே தொடங்கினேன். ஆனால் அண்ணாவை படிக்க படிக்க திராவிட அரசியல் ஏன் ஆரம்பம் ஆகவேண்டும் என்பதன் நோக்கம் தெளிவாக விளங்குகிறது. சாதாரண குடும்ப பின்னணி, சீட்டாட்டம், மூக்குபொடி என வாழ்ந்த சராசரி மனிதனின் சிந்தனை ஒரு சமூகத்தை சிந்திக்க வைத்தது அவரை தலைவர் ஆக்கியது.
அண்ணாவின் எண்ண ஓட்டங்கள் மூன்று காலநிலைகளில் பிரிக்கலாம். தி க காலம், திராவிட நாடு கோரிக்கை காலம், திராவிட நாடு கோரிக்கை கைவிட்டு அதன் காரணங்கள் ஒன்றும் சீராகத காலம். இதில் இந்த புத்தகம் அதிகம் அவரது பின் இரண்டு காலங்களை அதிகம் கூறுகிறது.
அண்ணாவின் கொள்கை துணிவு இன்றைய காலகட்டத்தில் எத்தனை பேருக்கு அரசியலில் உள்ளவர்களுக்கு உண்டு என்று புரியவில்லை. சுதந்திர தினம் துக்க நாள் அல்ல, வெற்றியின் முதல் படி. நான் பிள்ளையாரை உடைக்கமாட்டேன், பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன். அழிக்கப்பட வேண்டியது எல்லா சாதியிலும் உள்ள பார்ப்பனியம் அன்றி பார்பாங்கள் அல்ல என்று தன் நிலைப்பாட்டில் தன் தலைவரையும் தாண்டி காட்டிய உறுதி. முதல்வராக இறந்த போது இவரக்கு இருந்த கடன் கட்சி உறுப்பினர்களால் அடைக்கப்பட்டது. எளிமைக்கு பல உதாரணம். கட்சிக்கு பெயர் வைக்கும் போது "திராவிடர் முன்னேற்ற கழகம்" என்று இடாமல் "திராவிட முன்னேற்ற கழகம்" என சிந்தித்தது. படிக்க தெரியாத, அப்போது படிக்க ஆரம்பித்த தமிழ் சமூகத்தை வாசிக்க (தமிழ் மட்டும் அல்ல, ஆங்கிலத்தையும்) தூண்டிய சிந்தனை. தன் வாரிசுகளை அல்லது குடும்பத்தை கட்சியின் அடுத்த நிலைக்கு கொண்டு வர விரும்பாத எண்ணம் என பல விஸ்யங்கள் இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டியது.
அண்ணாவின் கூர்மையான நாடாளுமன்ற உரைகள், சட்டமன்ற உரைகள், முக்கியமான பத்திரிக்கை பேட்டிகள் போன்றவற்றில் அதிக பக்கங்கள் ஒதுக்கியதற்கு ஒரு சபாஷ்.
ஒரே படங்களை அதிகமாக உபயோகிப்பதை தவிர்த்து இருக்கலாம், அது புத்தகத்தின் பக்கங்களையும் குறைத்து இருக்கும். இந்த புத்தகம் வாசிக்க இன்னொரு காரணம் இவர் ஆட்சியில் நடந்த கீழவெண்மணி சம்பவம் குறித்து அண்ணாவின் வெளிப்பாடு பற்றி அறிந்து கொள்ள ஆவல் இருந்தது. ஆனால் அவர் ஆழ்ந்த வருத்தம் கொண்டார் என்று ஓர் இரண்டு வரிகளில் கடந்து செல்கிறது.
அண்ணா வாஜ்பாய் நட்பு, அண்ணாவின் வெளிநாட்டு பயணங்கள், அண்ணாவின் நாடகங்கள், சிறுகதை, பத்திரிக்கை பணி, தம்பிகளுக்கு கடிதம், திரை துறை பணி என பல முகங்களை கூறுகிறது. தொ ப, கி ரா, சிவத்தம்பி, ராஜ் கௌத்தமன் என பல அறிஞர்களின் மற்றும் தலைவர்களின் கட்டுரைகள், அறிய புகைப்படங்கள் அருமை.
அண்ணா கொண்ட தமிழ் பற்று உண்மையில் மாபெரும் தமிழ் கனவே! மேலும் மாநிலங்களுக்கான சுயாட்சி என்பது இந்திய மாநிலங்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும், அதை ஜனநாயக முறையில் பெற முடியும் என்ற மற்றொரு பெரும் கனவு. ஆனால் ஒற்றை அதிகாரத்தை நோக்கி நகரும் மைய அரசும், தன் தம்பிகள் வளர்க்கும் கட்சிகளுக்கு உள்ளேயே ஜனநாயகம் அறுந்துவிட்ட இந்த கால கட்டத்தில் அண்ணாவின் ஜனநாயக கனவு சாத்தியப்படுமா? கனவு மெய்ப்பட வேண்டும்.12407:49 AM
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment