ஒரு பழைய புத்தகைகடை தெரு, புத்தக கண்காட்சியை விட சிறந்தது என்ற எண்ணம் எப்போதும் எனக்கு உண்டு. பழைய புத்தககடையில் வேண்டும் புத்தகம் கிடைப்பது என்பது மிக அரிது. ஆனால் அவை விதைக்கும் தேடல் அலாதியானது. சென்ற வாரம் மதுரை சென்றபோது மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள பழைய புத்தக தெருவில் வாங்கிய புத்தகங்கள் 5. கொடுத்தது ரூபாய் 100. அதில் இதுவரை படித்தது 2. அதுபற்றி இன்று. 1) மனிதரை தேடி : மு மேத்தாவின் கவிதை தொகுப்பு. மேத்தாவிற்கே உரிய எளிய நடை, தரமான சிந்தனை. பாபர் மசூதி இடிப்பிற்கு பிந்திய காலகட்டத்தில் மதம் பிடித்த மனிதனை பற்றிய கவிதைகள். இந்திரா பார்த்தசாரதி, கடவுளை கலைஞன் இவ்வளவு காலம் காப்பாற்றி வந்துவிட்டான் என்று கூறுவார். ஆனால் இப்போது கடவுளை காப்பாற்ற மதம் எடுக்கும் முடிவுகளால் கடவுள் தன்னை மாய்த்துக்கொள்வார் என கனக்க வைக்கிறார் மேத்தா. 2) தகனம் : ஆண்டாள் பிரியதர்ஷினி. புத்தகத்தின் முன்னுரையில் கி ராஜநாராயணன் நாவலுக்கு மயான காண்டம் என பெயரிட பணித்திருந்தார். அவர் கூறியது உண்மை என்று நாவலை வாசித்த பிறகு உணர முடிந்தது. சுரேஷ் பிணகுழியில் விழும் போது என்னுடலில் புழுக்கள் நெளிவதை உ...
Comments
Post a Comment