இந்திய நாத்திகமும் மார்க்சிய தத்துவமும்


 

இந்திய நாத்திகமும் மார்க்சிய தத்துவமும்: பேராசிரியர் நா. வானமாமலை. மிகவும் குட்டி புத்தகம். வானமாமலை அவர்கள் பல தமிழக சிந்தனையாளர் களுக்கு ஆசான். இந்த புத்தகம் யார் நாத்திகர் என்பதற்கு ஒரு எளிய விளக்கம் தருகிறது. நாம் இன்றைய நிலையில் இருப்பதால் கடவுள் மறுப்பு மட்டும் நாத்திகம் என்று கொள்கிறோம். ஆனால் உண்மையில் அதிகப்படியான மக்கள் நம்பும் கருத்தை உண்மையை கொண்டு உடைக்கும் ஒவ்வொருவரும் நாத்திகர் என்கிறார் ஆசிரியர். உதாரணம் ஒரு காலத்தில் சூரியன் ஒரு கடவுள் என்ற கோட்பாடு நிறைந்த மக்கள் கூட்டத்தில். சூரியன் ஒரு பொருளால் ஆன வஸ்த்து என்று கூறியவர் நாத்திகர் எனப்பட்டார் அந்த மேற்கத்திய மதத்தில். உலகம் தட்டை இல்லை உருண்டை என்று சொன்னவர் நிலையும் அதே.


ஆசிரியர் கூறும் கூற்று படி நாத்திகர்களின் வரலாறு தனி புத்தகமாக இட வேண்டிய பெரும் பணி. வேத காலத்தில், சங்க காலத்தில், இராமாயணம், பாரதம் இயற்றப்பட்ட காலத்தில், தற்கால என எல்லா காலத்திலும். நாத்திக தத்துவங்கள் இருந்துகொண்டே வந்துள்ளது. நாத்திகத்தை ஆத்திகமும், ஆத்திகத்தை நாத்திகமும் ஆழமாக படித்து வந்து கொண்டே இருக்கிறது. மார்க்ஸ் ஆத்திக தத்துவத்தை எப்படி எதிர் கொண்டார் என்று அவரின் குறிப்புகளில் இருந்து எடுத்து கூறுகிறார்.

உலகில் ஆத்திக தத்துவங்களை விட நாத்திக தத்துவங்கள் அதிகம் இருந்தும். ஆத்திகம் வளர்ச்சியடைய அதிகபட்ச காரணமாக நாத்திகத்தால் ஆத்திகத்தின் நரகம், சௌர்க்கம், விதி மேலும் பல கிளை நம்பிக்கைகளை தகர்க்காமல், கடவுள் மீது மட்டுமே பாய்கிறார்கள் என்றும் விளக்குகிறார்.

Comments

Popular posts from this blog

கூரைப்பூசணி

கரிசல் கருதுகள்