கிழிசல் - பூமணி.ஆசிரியர் பற்றி அதிகம் கூற வேண்டியதில்லை. கரிசல் பகுதி (விருதுநகர், சங்கரன்கோவில், சிவகாசி, கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, கமுதி என வறண்ட பகுதி) எழுத்தாளர்களில் குறிப்பிடதக்கவர். இவரின் அஞ்ஞாடி நாவலுக்கு சாகித்ய அகடமி விருது பெற்றவர். பூமணியை வாசிக்க தூண்டியவர் tho பரமசிவன் அவர்களின் கட்டுரைகள்.
வட்டார வழக்கில் எழுதும் நடை அருமையாக உள்ளது. அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடிக்கிறார். தீப்பெட்டி ஒட்டிய குடும்பகள், சிறு வியாபார குடும்பங்கள், சிற்றூர் காவல்துறையினர் என இவரின் கதை மாந்தர்கள் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களை சுற்றி அமைகிறது. மணம், அடமானம் போன்ற சிறுகதைகள் மிகவும் கவர்கிறது. அநேக கதைகள் எதிர்மறை முடிவுகளை கொண்டு ஒரு சோகத்தை நம்மில் ஏற்றி விடுகிறது. ஆங்காகே ஆசிரியரின் நகைச்சுவை உணர்வு நயம். வாழை இலை விருந்து படைக்கும் ஆசிரியர்களுக்கு இடையில் வட்டிலில் பால்சாதம் இட்டு துவையல் தரும் படைப்புகள் இந்த சிறுகதைகள்.

Comments
Post a Comment