Posts

Showing posts from January, 2019

இந்திய நாத்திகமும் மார்க்சிய தத்துவமும்

Image
  இந்திய நாத்திகமும் மார்க்சிய தத்துவமும்: பேராசிரியர் நா. வானமாமலை. மிகவும் குட்டி புத்தகம். வானமாமலை அவர்கள் பல தமிழக சிந்தனையாளர் களுக்கு ஆசான். இந்த புத்தகம் யார் நாத்திகர் என்பதற்கு ஒரு எளிய விளக்கம் தருகிறது. நாம் இன்றைய நிலையில் இருப்பதால் கடவுள் மறுப்பு மட்டும் நாத்திகம் என்று கொள்கிறோம். ஆனால் உண்மையில் அதிகப்படியான மக்கள் நம்பும் கருத்தை உண்மையை கொண்டு உடைக்கும் ஒவ்வொருவரும் நாத்திகர் என்கிறார் ஆசிரியர். உதாரணம் ஒரு காலத்தில் சூரியன் ஒரு கடவுள் என்ற கோட்பாடு நிறைந்த மக்கள் கூட்டத்தில். சூரியன் ஒரு பொருளால் ஆன வஸ்த்து என்று கூறியவர் நாத்திகர் எனப்பட்டார் அந்த மேற்கத்திய மதத்தில். உலகம் தட்டை இல்லை உருண்டை என்று சொன்னவர் நிலையும் அதே. ஆசிரியர் கூறும் கூற்று படி நாத்திகர்களின் வரலாறு தனி புத்தகமாக இட வேண்டிய பெரும் பணி. வேத காலத்தில், சங்க காலத்தில், இராமாயணம், பாரதம் இயற்றப்பட்ட காலத்தில், தற்கால என எல்லா காலத்திலும். நாத்திக தத்துவங்கள் இருந்துகொண்டே வந்துள்ளது. நாத்திகத்தை ஆத்திகமும், ஆத்திகத்தை நாத்திகமும் ஆழமாக படித்து வந்து கொண்டே இருக்கிறது. மார்க்ஸ் ஆத்திக தத்துவத்தை...
Image
  கிழிசல் - பூமணி. ஆசிரியர் பற்றி அதிகம் கூற வேண்டியதில்லை. கரிசல் பகுதி (விருதுநகர், சங்கரன்கோவில், சிவகாசி, கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, கமுதி என வறண்ட பகுதி) எழுத்தாளர்களில் குறிப்பிடதக்கவர். இவரின் அஞ்ஞாடி நாவலுக்கு சாகித்ய அகடமி விருது பெற்றவர். பூமணியை வாசிக்க தூண்டியவர் tho பரமசிவன் அவர்களின் கட்டுரைகள். வட்டார வழக்கில் எழுதும் நடை அருமையாக உள்ளது. அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடிக்கிறார். தீப்பெட்டி ஒட்டிய குடும்பகள், சிறு வியாபார குடும்பங்கள், சிற்றூர் காவல்துறையினர் என இவரின் கதை மாந்தர்கள் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களை சுற்றி அமைகிறது. மணம், அடமானம் போன்ற சிறுகதைகள் மிகவும் கவர்கிறது. அநேக கதைகள் எதிர்மறை முடிவுகளை கொண்டு ஒரு சோகத்தை நம்மில் ஏற்றி விடுகிறது. ஆங்காகே ஆசிரியரின் நகைச்சுவை உணர்வு நயம். வாழை இலை விருந்து படைக்கும் ஆசிரியர்களுக்கு இடையில் வட்டிலில் பால்சாதம் இட்டு துவையல் தரும் படைப்புகள் இந்த சிறுகதைகள்.
Image
  காமராஜர் கொலை முயற்சி சரித்திரம் - கி வீரமணி. வரலாற்றை படிக்க படிக்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. 1966 நவம்பர் 7ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் மீது சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறை ஒரு தாக்குதல் நடத்தப்படுகிறது. நடத்தியவர்கள் யாரும் அல்ல இப்போது பசு பாதுகாவலர்களாக செயல்படும் அதே கூட்டம். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சட்டரீதியாக பசுக்களை வெட்டுவதை தடை செய்ய மறுக்கிறார். இதன் விளைவாக ஒரு கலவரம் வெடிக்கிறது தலைநகர் டெல்லியில். அதில் காங்கிரஸ் கட்சித்தலைவர் காமராஜர் அவர்களின் வீடும் தீகிறையக்கபடுகிறது. அவர் இந்த அசம்பவிததில் இருந்து தப்புகிரார். அதை விவரமாக எழுதுகிறார் வீரமணி. அப்போதைய பத்திரிகைகளின் செய்தி, புகைப்படங்கள் எடுத்து விளக்குகிறார். தி க தலைவராக இருந்தாலும், தி மு கவை வறுத்தெடுக்கும் காமராஜரின் உரைகளை நீக்காமல் இருப்பது பெரியார் கற்றுக்கொடுத்த ஒழுக்கம் போல். இந்த செயலுக்கு பெரியார் கூறும் எதிர்ப்பு அருமை. "கத்திவைத்து கொள்ளுங்கள்! காமராஜரை பாதுகாருங்கள்! மறுபடியும் எழுத இடம் வைத்துகொள்ளதீர்கள். கண்டிப்பாய் கத்தி வைத்துக்கொள்ளுங்கள்.". புத்தகம் படித்தால் பல சிந்...