கடந்த நான்கு மாதங்களில் மாதத்திற்கு ஒரு புத்தகம் விகிதம் நான்கு புத்தகங்கள் படித்திருக்கிறேன்.
ராகுல் சாங்கிருத்யாயன் இந்தியா அறிந்த ஒரு முற்போக்கு ஊர் சுற்றி. ஊர் சுத்துறதுக்கு ஒரு புக்கான்னுதான் படிச்சேன். ஊர் சுற்றிகளுக்கு ஒரு இலக்கண புத்தகம். சமூக கட்டுப்பாடுகளுடன் வாழும் மனநிலையில் உள்ள யாவர்க்கும் இந்த புத்தகம் ஒரு தேவையில்லாத நகைச்சுவையாக படலாம். ஆனால் அவர்களுக்கான பாடங்களும் அதிகம் உள்ளது.
S Ramakrishnan சிறிது வெளிச்சம். இது விகடனில் வெளிவந்த தொடரின் தொகுப்பு. நாம் அன்றாடம் கண்டாலும் காணாமல் போகின்றன பல இடங்களை திறந்து பேசுகிறது இந்த புத்தகம் அதில் எனக்கு பிடித்தது குழந்தைகள் பற்றிய அனைத்து கட்டுரைகளும். இதன் ஊடாக வேற்று மொழி படங்களையும், சிறுகதைகளையும் குறிப்பிட்டு இருப்பது நன்றாக உள்ளது. ஓவியங்கள் நன்றாக வரைந்துள்ளார் aanandjapadmanaadhan
Tho பரமசிவன் அவர்களின் பரண், தெய்வங்களும் சமூக மரபுகளும்.
எனக்கு பிடித்தமான நாட்டார் வழக்கு பற்றி பல முக்கிய கட்டுரைகள் கொண்டுள்ளது. பண்பாடு, கலாச்சாரம் என்பது வெறும் கடவுள் வழிபாடு, குடும்ப அமைப்பில் குறுகிவிட்ட இன்றைய சூழ்நிலையில். அவைகள் எப்படி வர்த்தகம், தொழில், நம் பேச்சு வழக்கு, காலநிலை, நிலம் என நம்மை சுற்றியுள்ள அனைத்திலும் உள்ளது என கூறுகிறார். நாம் ஏன் ஒருவரிடம் மனம் குளிர வாழ்த்துகிறேன் என்றும், ஆங்கிலேயன் warm welcome என்றும் கூறுகிறோம் என்று யோசிக்க வைக்கிறார்.

Comments
Post a Comment