இந்துமதம் எங்கே போகிறது?
இந்துமதம் எங்கே போகிறது? அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர் நக்கீரன் பதிப்பகம் விலை 275 ரூபாய் 352 பக்கங்கள் புதுமைப்பித்தன் தன்னுடைய கடவுளின் பிரதிநிதி என்ற சிறுகதையில் இப்படி கூறுகிறார். "திரு சங்கர் சிற்றூரில் தமது தொண்டை பிரச்சாரம் செய்ய வந்தார். அவரும் ஜாதியில் பிராமணர். தியாகம், சிறை என்ற அக்கினியால் புனிதமாக்கப்பட்ட வர். சலியாது உழைப்பவர். உண்மையை ஒளிவு மறைவு இல்லாது போட்டு அடித்து உடைப்பவர்." இந்த வரிகள் சங்கருக்கு பொருந்துகிறதோ இல்லையோ ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்களுக்கு அப்படியே பொருந்துகிறது. இவர் சிறை செல்லாமல் சிந்தனையால் புனிதமாக இருக்கிறார். இந்தியாவில் இருந்த 450 மதங்களில் எது இந்து மதம்? என்ற கேள்வியில் முதல் கட்டுரையை தொடங்கி. ஜாதிகள் தொடக்கம், அதன் விரிவாக்கம். வேதம், மநு, உபநிஷத்துக்கள், உபநயனம் என பலவற்றை எடுத்துக்கூறி அதற்கு தக்க உதாரணமும் கொடுத்துள்ளார். மேலும் வேதம் மற்றும் மநுவுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள். சங்கரர் ராமானுஜர் வியாசர் ஜெய்மினி எனப் பலரின் கதைகள். பல மடங்களின் கதைகள், பல புனித தளங்களின் கதைகள். பல சடங்குகளின் காரணங்கள். இவை எல்லாவ...