தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்
தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் பாரதி புத்தகாலயம் 239 பக்கங்கள் விலை: 150 ரூபாய் வாசிப்பவருக்கு வாசகன் என்று பெயர் எங்கிருந்து வந்தது என்று எனக்கு புலப்படவில்லை. பிற கலைகளில் அதை உள்வாங்குபவர்களுக்கு பொதுவாக ரசிகன் என்று ஒருமைப் படுத்துதல் சாத்தியம். ஒரு சிற்பியின் நுணுக்கத்தை அறிபவன் ரசிகன், ஒரு ஓவியனின் நுணுக்கத்தை அறிபவன் ரசிகன், இப்படி இன்னும் பல. வாசகன் என்பவனும் எழுத்துக்களை ரசிக்க இவனும் ஒரு ரசிகன் தான், ஆனால் வாசகன் என்ற தனித்த அடையாளம் தரப்பட்டிருக்கிறது. இது எழுத்தாளர்களில் குறுஞ்சதியாக கூட இருக்கலாம். வாசகனுக்கு ஒரு சவுகரியம் என்னவென்றால் எழுத்தாளன் தன் படைப்புகளால் தன் வாசகனை எழுத்தாளராகவும் ஆக்க உந்த செய்யும் சாத்தியக்கூறுகள் பிற கலைகளுடன் ஒப்பிடும்போது எழுத்துலகில் அதிக சாத்தியம் வாய்ந்த ஒன்று என்றும் மேலும் அதற்கான மெனக்கெடல் குறைவு என்று எனக்குப்படுகிறது. இந்தத் தொகுப்பில் மொத்தம் 32 கதைகள் உள்ளது. பூ என்ற தமிழ் படத்தின் மூல சிறுகதையான வெயிலோடு போய் என்ற சிறுகதையும் இதில் அடக்கம். கண்முன் கொட்டிக்கிடக்கும் ஆசைகளை, அன்பை, அலட்சியகளை, ஏமாற்றத்தை எளிமையான எழுத்துக்களின் மூ...