விஞ்ஞான லோகாயத வாதம்
விஞ்ஞான லோகாயத வாதம் ராகுல் சாங்கிருத்தியாயன் தமிழில்: ஏ ஜி எத்திராஜீலு பக்கங்கள்: 153 விலை: 135 சென்ற வருடம் சென்னை புத்தக கண்காட்சி சாலையில் அதிகம் விற்ற 10 புத்தகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ராகுல் சாங்கிருத்தியாயன் அவர்களின் வால்கா முதல் கங்கை வரை புத்தகமும் இடம்பெற்றிருந்தது. வடமாநிலத்தை சேர்ந்த இவரின் தமிழகத்தில் அதிகம் வாசிக்கப்படுவது வரவேற்கத்தக்கதே. இந்தப் புத்தகம் எழுதிக் கிட்டத்தட்ட எண்பது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. உண்மையில் இந்தப் புத்தகத்தின் பல பக்கங்களை இரண்டு மூன்று முறை படித்து அர்த்தம் புரிந்து கொண்டேன். ஒரு புரியாத ஆங்கில படத்தை பார்ப்பது போன்று ஒரு அனுபவத்தை தந்தது இந்த புத்தகம். அதற்கு நமக்கு இதுவரை கற்பிக்கப்பட்ட மிக எளிமையான தத்துவங்கள் மட்டுமே காரணமாக இருக்கலாம். அது திருக்குறள் ஆக இருக்கலாம், எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்ற கீதை சாரமாக இருக்கலாம் அல்லது காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா என்ற கண்ணதாசனின் வரிகளாக இருக்கலாம். நம் சமூகத்தில் தத்துவ தர்க்கங்கள் அதிகம் இல்லாத சூழலை நாம் ஏன் ...