பட்டத்து யானை & அரியநாச்சி
பட்டத்து யானை ஆசிரியர்: வேல ராமமூர்த்தி பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் பக்கங்கள்: 376 விலை 300 புத்தக வாசிப்பில் வேகமான வாசிப்பு அனுபவம் தரும் புத்தகங்கள் பல உள்ளன, எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். அதற்கு நேர் எதிரிடையாக சிக்கலான அல்லது ஆழ்ந்த வாசிப்பனுபவம் கோரும் படைப்புகளும் அதிகம் உள்ளது எழுத்தாளர்களும் அதிகம் உள்ளனர். இவற்றில் எதை, யாரை, எப்படி வாசிப்பது என்பதையெல்லாம் வாசகர்கள் தங்களின் விருப்பத்திற்கு தேர்வு செய்து கொள்ளுங்கள். இந்தத் தேர்வுக்கு ஆகச்சிறந்த உதவி தங்களின் சிந்தனை மற்றும் ரசனையாக மட்டுமே இருக்கட்டும். முதல் ரக புத்தகங்களுக்கு வாசகர்கள் தங்களின் சிந்தனை திறன் மற்றும் நேரம் ஆகியவற்றை மிகவும் குறைவாக செலவழிக்க நேரிடும். அப்படிப்பட்ட பல படைப்புகளில் இழையோடும் வேகம், அவற்றின் மேலிடும் வியப்பு அவர்களை புத்தகத்தை கீழே வைக்க விடாது. அப்படி இரண்டு புத்தகங்களை அடுத்தடுத்து படிக்க முடிந்தது. தனுஷ்கோடி வாணிப நகரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வன்முறை நடக்க இருப்பதாக தகவல்கள் வருகிறது. வெள்ளை அதிகாரி லாரன்ஸ் தலைமையில் தனுஷ்கோடி ரயில் நிலையத்தை சோதனை இடுகிறார்கள். சோதனையில் அகப்படா...