பிறகு
பிறகு பூமணி காலச்சுவடு பதிப்பகம் விலை 275 ரூபாய் 255 பக்கங்கள் கொரோனா காலம் என்று தனக்காக ஒரு வரலாற்றையே கட்டமைத்துக் கொண்டிருக்கிறது கண்ணுக்கு தெரியாத கிருமி. இன்னும் சில நாட்களில் மருத்துவரீதியாக கொரோனா பெற்ற ஜாதி. கொரோனா இல்லாத ஜாதி என்று மனித இனங்கள் பிரிக்கப்பட்டு விடுமோ என்று சந்தேகமாக உள்ளது. ஏதோ ஒரு தட்டு மக்களுக்கு மட்டும் இந்த நோய் என்பது போய் என்று எல்லாத் தட்டு மக்களுக்கும் பரவியிருக்கிறது. இந்த நோயின் தாக்கம் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை எந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை எண்ணிப்பார்க்க மனம் சற்றே கனக்கிறது. இந்த சூழலிலும் அதிகாரம், அறம் தவறி நிகழ்த்தும் தவறுகள் வருத்தத்திற்குரியது. மனம் அறம் பற்றி மனிதம் காக்க வேண்டிய தருணங்கள் இவை நண்பர்களே! மணலூத்து சக்கிலிய குடிக்கு மணலூத்தின் ஊர் பெரியவர்களால் துரைசாமிபுறத்திலிருந்து இடம் பெறுகிறான் கதையின் மையப் பாத்திரம் அழகிரி. அழகிரியின் தொழில் செருப்பு மற்றும் தோல் பொருட்கள் தைத்தல் குறிப்பாக விவசாயிகளுக்கு பயன்படும் நீர் இறைக்கும் கமலம் தைத்தல். இடம்பெயர்ந்த அழகிரியின் தோராயமாக இருபது ஆண்டுகால வாழ்க்கையை அவன் சந்திக...