Posts

Showing posts from June, 2020

காடோடி

Image
  காடோடி நக்கீரன் காடோடி பதிப்பகம் விலை: 300 ரூபாய் பக்கங்கள்: 312 மொழிபெயர்ப்பு சாராத தமிழ் நாவல்கள் பொதுவாக தமிழகம் சார்ந்து அல்லது இந்தியா சார்ந்து களமாகக் கொண்டு அதிகம் எழுதப்படுகிறது. இதில் விதிவிலக்காக அவ்வப்போது வேறு நாட்டை கதைக்களமாகக் கொண்டு கதைகளும் எழுதப்படுகிறது. அந்தவகையில் இந்திரா பார்த்தசாரதி எழுதிய ஏசுவின் தோழர்கள் போல காடோடியின் கதைக்களமும் அந்நிய மண். துவான் போர்னிய நாட்டின் காட்டுக்குள் மரம் அறுக்கும் நிறுவனத்தின் மேற்பார்வையாளர். உமர், பிலியவ், அன்னா, ஜோஸ், ரலா, குணா, குவான், பார்க், ஆங் போன்ற பாத்திரங்களை வைத்து கதை கையாளப்படுகிறது. ஆசிரியர் நம்மை கை பிடித்து காட்டுக்குள் அழைத்துச் சென்று அதன் அழகை, இசையை, தூய்மையை, பிரமிப்பை, தொடர்பை வாசிப்பின் மூலம் நமது ஐம்பொறிகளால் உணர வைக்கிறார். தும்பிக்கை குரங்குகளில் தொடங்கி பல விலங்குகள், இரு வாசிகள் பறவைகள், மீன்கள், மனிதர்களின் மூதாதையரான குரங்குகளுக்கு மூதாதையர்கள் எனப்படும் லீமர், துபையா போன்ற அணில் வகைகள், பூச்சியினங்கள், மர வகைகள், நீர்வழிப் பாதைகள் என அனைத்து குறிப்புகளும் சுவாரசியம். நட்பை நட்பாகவும் காதலை காதல...