வீர யுக நாயகன் வேள்பாரி
வீர யுக நாயகன் வேள்பாரி. சு. வெங்கடேசன். ஆனந்த விகடனில் தொடராக வந்து பெரும் வரவேற்பை பெற்ற சரித்திர தொடர்கதை. பல சிறந்த ஓவியங்களை கொண்டுள்ளது தனி அழகு. பாரியின் ஒட்டுமொத்த வாழ்க்கை தொகுப்பாக இந்த தொடர் அமையவில்லை என்ற ஒரு வருத்தம். வாணிபம், பொருள் ஈட்டல் இதன் பொருட்டு மனிதன் மீறும் அறங்கள் பல, அவற்றில் ஒரு முகத்தை பார்க்க முடிகிறது. பறம்பு நாட்டின் இயற்கை செல்வம், இயற்கை அறிவு , பாரியின் புகழ் பொறுக்காத மூவேந்தர்கள் தனித்தனியே போரிட்டு தோற்று. பின் மூவரும் ஒன்று இணைந்து போர் புரிகிறார்கள். ஆசிரியரும் கதையை சுபமாகவே முடிக்கிறார். பறம்பு நாட்டில் தஞ்சம் அடைந்து வாழும் சிறு குடிகளின் கதைகள், கபிலர் - திசை வேளர் உரையாடல், இயற்கையை புரிந்து வைத்திருக்கும் மக்கள், கலப்புமணம் அங்கீகரிக்கும் பாரி, காதல், வஞ்சகம், சதி, வீரம், போர், அதி முக்கியமாக போரின் களம், குணம் பற்றி ஒரு ஆழ்ந்த பார்வை, அதிகப்படியான கற்பனை என கதை பின்னபட்டு இருக்கிறது. கோல் சொல்லாதே என்று பிள்ளைகளை அடிக்கடி நாம் கூறுவது உண்டு. கோல் சொல்லிகள் போரில் அதன் அறம் காக்கும் பணி செய்பவர்கள் என்பது, வேள், தேவவாக்கு விலங்கு மருவ...