சென்ற வாரம் மன் கி பாத்தில் பிரதமர் அவர்கள் அம்பேத்கர் பற்றி கூறியது தற்செயலாய் கேட்டதும் (அம்பேத்கரின் மூல கருத்தான சாதியை கூறாமல்), UP முதல்வர் அம்பேத்கர் பெயரில் அவரது தந்தை பெயர் ராம்ஜியை இணைத்து சர்ச்சையை கிளப்பியது அம்பேத்கர் பற்றி படிக்க தூண்டியது. இந்தியாவில் சாதிகள்: அம்பேத்கர் 1) 25 வயது இளைஞனின் சாதிகுறித்த ஆய்வறிக்கை, சரியாக 20 வருடங்கள் கழித்து அவர் ஆற்றவிருந்த ஒரு கூட்டத்தின் உரையும், இந்த உரை ஏன் ஆற்ற முடியாமல் போனது என்பதற்கான கடித பரிமாற்றங்களையும், காந்திஜியின் கருத்து (வருணத்தை ஆதரித்து) உள்ளடக்கியது இந்த 140 பக்க குறு புத்தகம். 2) சாதிகளின் பிறப்பு, வளர்ச்சி அதன் இன்றைய நிலை (100 வருடங்களுக்கு முந்தைய நிலை, ஆனாலும் இன்றும் பெரிய வித்யாசம் இல்லை ) என ஆராய்கிறது அவரது அறிக்கை. 3) "பிறர் போல செய்தல்" என்ற மனித பண்பு சாதியை எல்லா தளங்களிலும் பரவச்செய்தது, பாதி கடவுளாக பார்க்கப்பட்ட ஒரு கூட்டம், இந்திய முழுவதும் தனி தனி சாதி கூட்டங்கள் நிரம்பிருந்தது அனால் இந்து என்ற ஒரு அமைப்பு இருந்ததில்லை என பல கருத்துகள் சிந்திக்க வைப்பவை. 4) சாதியால் சமூகம், பொருளாதாரம்,...