Posts

Showing posts from December, 2018
Image
  அனைவருக்கும் இனிய அங்கிலபுத்தாண்டு வாழ்த்துக்கள்!!! வோல்கா முதல் கங்கை வரை - ராகுல் சங்கிர்தியானன். மேலோட்டமாக இந்த புத்தகத்தை கால வரிசைப்படி எழுதப்பட்ட 20 சிறுகதை தொகுப்பு என எளிதில் கடந்து சென்றுவிட முடியவில்லை. அநீதி, கொலை, அடிமை முறை, ஏற்றத்தாழ்வு என்ற அனைத்தும் எப்படி, யாரால், யார் மீது, எதற்காக அங்கீகரிக்கப்பட்டு அரங்கேற்றபடுகிறது என்று விளக்குகிறார். பசுவை உணவாக உண்ட ஒரு கூட்டம் ஏன் அவற்றை உண்ண மறுத்தது, மேலும் பசுவிற்கு ஏன் புனிதம் கற்பிக்கிறது, ஒரு கடவுள் அல்லது நம்பிக்கை ஏன் படைக்கப்படுகிறது, அந்த படைப்பின் மீதான நம்பிக்கை குறையும் பட்சத்தில் அதிகார வர்க்கம் புதிய நம்பிக்கைகளை அவர்களின் நன்மைக்காக கட்டிஎழுப்புவது என சமுதாய மாற்றங்கள் குறித்து நன்கு சிந்திக்க வைக்கிறது. எல்லா காலகட்டத்திலும் அடிமை முறையையும் ஏற்றத்தாழ்வுகளை கேள்வி கேட்க ஒரு கூட்டம் இருந்தே வந்துள்ளது, அந்த கூட்டம் அதிகாரத்தால் நசுக்கப்பட்டு வந்துள்ளது. இந்த ஆட்டம் பல நாடுகளில் விடுபட்டாலும் இந்தியாவின் நிலை பற்றி மிகவும் நுட்பமாக ஆராய்கிறார், இந்தியாவின் நிலை மாறும் என்று நம்பிக்கை ஒளி ஏற்றுகிறார். பிரவா...