ம்ம் ஹரர் த் தூ. எச்சில் விழுந்தது சாலையில். அலட்சியமாக நாம் கடந்து போவது உண்டு, இன்னும் சிலருக்கு அந்த நடவடிக்கை கோபம் தருவது உண்டு. ஆனால் அதில் என்னதான் இருக்கிறது, அது நமக்கு என்னதான் சொல்லிவிடும் என்று தேவையில்லாமல் சிந்தித்தது உண்டு சில நேரங்களில். ஆனால் எச்சில் நம் பரம்பரையின் மரபணுவை சுமந்து செல்கிறது. இந்த மரபணு நமது முன்னோர்களின் தன்மைகளை கொண்டுள்ளது. "முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா" என்று பாரதி சொன்னால், இந்த இந்த பண்புகளை சுமந்து வந்து நிற்கும் மனிதன் நான். உன் பாதகத்திற்கு உடன்படமாட்டேன் என்று உணர்த்த இருக்கலாம். சரி நாம் மரபணுவிற்கு வருவோம். இந்த மரபணு நமது முன்னோர்களுக்கு இருந்த சத்து குறைபாடுகள் மற்றும் நோய்களின் தகவல்களை சுமந்து செல்கிறது. நாளை நமக்கோ அல்லது நமது சந்ததிக்கோ வரப்போகும் நோய்களை கண்டறிய இந்த தகவல்கள் உதவுகிறது. நாளைய அறிவியல் இன்றே வளர்கிறது என்பது பொய்யல்ல, அன்னே ஓஜசிக்கி என்பவரால் உருவாக்கப்பட்டது https://www.23andme.com நிறுவனம். இவர் கூகிள் நிறுவர்களின் ஒருவரான செர்கே பிரின் என்பவரின் மனைவியாவர். இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களின் எச்சி...